சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லைக் கொடுத்த அரசு ஊழியர்
Share

காரைக்குடியை அடுத்த பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் 40 வயதான பாலாஜி. இவர் மதுரை ஐ.ஜி அலுவலகத்தில் தட்டச்சு பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
பாலாஜி தனது வீட்டின் அருகில் வசிக்கும் 7 வயது சிறுமியிடம், பெற்றோரை கொலை செய்து விடுவதாக மிரட்டி கடந்த ஒரு வாரமாக பாலியல் தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மீண்டும் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று அவர் பாலியல் தொல்லை அளிக்க முயன்றுள்ளார்.
சிறுமியை காணாததால் தேடிச்சென்ற அவரது பெற்றோர் அவருக்கு நடந்த கொடுமையை கண்டு பாலாஜியை சராமாரியாக தாக்கி, வீட்டில் வைத்து பூட்டினர். பின்னர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதியானதால், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.