Type to search

இந்திய – நேபாள சாலைப்பணிக்காக புலிகள் நடமாடும் காட்டில் 55 ஆயிரம் மரங்களை வெட்ட பாஜக அரசு முடிவு..!

INDIA India Top Story India Trending

இந்திய – நேபாள சாலைப்பணிக்காக புலிகள் நடமாடும் காட்டில் 55 ஆயிரம் மரங்களை வெட்ட பாஜக அரசு முடிவு..!

Share

புலிகள் சுதந்திரமாக திரியும் உத்தரப் பிரதேச காடுகளிலிருந்து 55,000 மரங்களை வெட்ட உத்தரப் பிரதேச பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இம்மரங்கள் 200 ஆண்டு பழமையானவை எனக் கூறப்படுகிறது.BJP government decided cut 55000 trees forest land Indian-Nepal road

இதுகுறித்து ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் அளிக்கும் அதிர்ச்சி தகவல்கள் வருமாறு :

திரட்டிய சிறப்புத் தகவல்கள் வருமாறு :

இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் எல்லைப் பகுதி வழியே 500 கி.மீ.தொலைவிற்கு சாலை வசதி அமைக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி நேபாள எல்லைக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் உள்ள மரங்களை வெட்டி சாலை அமைக்க உத்தரப் பிரதேச பொதுப்பணித்துறை செயல்பட்டு வருகிறது.

புலிகள் சுதந்திரமாக திரியும் உத்தரப் பிரதேச காடுகளிலிருந்து 55,000 மரங்களை வெட்ட உத்தரப் பிரதேச பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இம்மரங்கள் 200 ஆண்டு பழமையானவை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் அளிக்கும் அதிர்ச்சி தகவல்கள் வருமாறு :

திரட்டிய சிறப்புத் தகவல்கள் வருமாறு :

இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் எல்லைப் பகுதி வழியே 500 கி.மீ.தொலைவிற்கு சாலை வசதி அமைக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி நேபாள எல்லைக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் உள்ள மரங்களை வெட்டி சாலை அமைக்க உத்தரப் பிரதேச பொதுப்பணித்துறை செயல்பட்டு வருகிறது.

திட்டம் நிறைவேற்றப்பட உள்ள இடத்தை ஆய்வு செய்த வனவிலங்கு பாதுகாப்பு கூறுகையில், “வனவிலங்குகளின் குழு காட்டுக்குள் சென்று ஆய்வு செய்தது.

இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக காடழிப்புக்காக அவர்கள் அடையாளமிட்டுள்ள 55,000 மரங்களும் 200 ஆண்டுகள் பழமையானவை.

இதனால் வனவிலங்குகளின் வசிப்பிடம் கடுமையாக சிதைக்கப்படும் நிலை ஏற்பட வாய்ப்புகள் நிறையவே உள்ளதை அறிந்தோம். இத்திட்டத்தை மீள்ஆய்வு செய்யுமாறு அரசை வலியுறுத்தினோம்” என்று கூறினார்.

இத்திட்டத்தில் பணியாற்றிவரும் உயரதிகாரிகள் கூறுகையில், சாலைப் பணி இன்னும் தொடங்கவில்லை. நவம்பர் 1 லிருந்துதான் தொடங்க உள்ளோம். இச்சாலை எல்லைப்பகுதியை ஒட்டிய அடர்ந்த காடுகளின் வழியே அமைக்கப்படுகிறது’’ என்றனர்.

‘’உண்மைதான், இத்திட்டத்திற்காக 55 ஆயிரம் மரங்கள் வெட்டப்பட உள்ளன. இதனால் நிச்சயம் வனவிலங்குகள் பாதிக்கப்படும்.’’ என்று தனது பெயரை தெரிவிக்க விரும்பாத ஒரு அதிகாரி தெரிவித்தார்.

‘’விளைவுகள் அதிகம் இல்லாமல் பணிகள் நடைபெற வேண்டும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கேட்டுக்கொண்டார்’’ எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதுகுறித்து எதிர்ப்பு தெரிவித்துள்ள நொய்டாவைச் சேர்ந்த சுற்றுச்சூழலியலாரும் தகவல் உரிமைச் சட்ட செயற்பாட்டாளருமான விக்ராந்த் டொங்காத், மரங்களை வெட்டி வீழ்த்துவதற்கு பதிலாக வேறு மாற்றுவழியைப் பற்றி ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் பேசினார்.

‘’இச் சாலை திட்டத்தில் மேம்பாலங்களைக் கட்டி காடு, வன மற்றும் முக்கிய பச்சை தாவரங்கள் ஆகியவற்றை அரசு பாதுகாக்க முடியும்.

55 ஆயிரம் மரங்கள் மிகப்பெரிய எண்ணிக்கையாகும். உத்தரப்பிரதேச அரசு அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும்’’ என்று அவர் தெரிவித்தார்.

நேபாளத்திற்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள தடைசெய்யப்பட்ட பாதுகாப்பான பகுதிகளில் அமைந்துள்ள பசுமை தாழ்வாரத்தை இச்சாலை துண்டிக்கப்போவது குறித்து ஒரு உயரதிகாரியிடம் கேட்டபோது, ‘’சாலைத் திட்டப் பகுதிகளில் மறுசீரமைப்புகள், சாலைகளில் மாற்றுப்பாதை கொண்டுவருவதைக் கோருவதில், இதைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்கான ஆய்வு மேற்கொள்ளுமாறு லக்னோவில் உள்ள வனத் தலைமையகம் எங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது’’ என்று தெரிவித்தார். அவரும் தனது பெயரை வெளியே சொல்ல விரும்பவில்லை.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags: