Type to search

தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கும் மோடி..!

INDIA India Top Story India Trending

தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கும் மோடி..!

Share

அரசின் நோக்கம் நிறைவேறிவிட்டது என நிதியமைச்சர் அருண்ஜெட்லி சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தார்.modi refuses accept defeat india tamil news

நிச்சயமாக அரசின் நடவடிக்கை முடிவடைந்து விட்டதுதான், ஆனால் நோக்கம் நிறைவேறியதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

கறுப்பு பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை என்றுதான் முதலில் அரசு அறிவித்தது. ஆனால் மதிப்பிழந்த பழைய ரூபாய் நோட்டுகளில் 99.3 சதவீதம் திரும்ப வந்து விட்டது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன்பு 15.40 லட்சம் கோடி ரூபாய் வரை பழைய 500-1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்த நிலையில் அதில் 15.28 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகள் திரும்பி வந்து விட்டதாக ரிசர்வ் வங்கி கூறுகிறது.

அப்படியானால் கறுப்புப் பணம் என கருதப்பட்ட ஊழல் பணம் என்ன ஆனது என்கிற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.

இந்த நடவடிக்கையின் தோல்வி குறித்து கேள்வி எழும்போதெல்லாம் மற்றொரு காரணத்தை சொல்வதை மத்திய அரசு வழக்கமாக்கியுள்ளது.

நிதியமைச்சர் கூறுகையில் வருமான வரி வரம்புக்குள் பலர் கொண்டுவரப்பட்டுள்ளனர் என்கிறார்.

ஆனால் கடந்த ஆண்டு வெளியான மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் 10,600 கோடி ரூபாய் அளவிற்கு கூடுதல் வரிவருவாய் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டது.

தவிர நாட்டில் வருமான வரி செலுத்தும் வருவாய் பிரிவினரை அறிவதற்காக பணமதிப்பு நீக்க நடவடிக்கை தேவையில்லை என தணிக்கையாளர்கள் சங்கம் விரிவான புள்ளிவிவரங்களையும் வெளியிட்டது.

ரொக்கமில்லா பரிமாற்றம் உயரும் என்றும் மத்திய அரசு கூறிவந்தது. அதற்கான புள்ளிவிவரங்களும் அரசுக்கு சாதகமாக இல்லை.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது ரொக்கப் பணத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் தற்காலிக நிகழ்வாக பலரும் ஆன்லைன் மூலம் ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு தள்ளப்பட்டனர்.

ஆனால், அதன் பின் நிலைமை மாறிவிட்டது. ரிசர்வ் வங்கியின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் படி இந்தியர்களின் ரொக்க சேமிப்பு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பணமதிப்பு நீக்கத்துக்காக பொதுமக்களும், வர்த்தகர்களும் கொடுத்த விலை அதிகம். நிலைமையை எதிர்கொள்ள முடியாமல் தவித்தவர்கள் ஏராளம்.

உயிரை விட்டவர்கள் பலர். பல லட்சம் கோடி ரூபாய் பழைய நோட்டுக்களை பெற்றுக் கொண்டு புதிய நோட்டுக்களை வழங்குவது சாதாரண காரியமல்ல. வங்கி ஊழியர்கள் பெரும் உழைப்பை இதில் செலுத்தினர். மாதக் கணக்கில் இந்த சிக்கல் நீடித்தது.

புதிய நோட்டுகளை அச்சடிப்பதற்கான செலவு, புதிய ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்ப ஏடிஎம் இயந்திரங்களில் மாற்றங்களை செய்ய செலவு, பிஓஎஸ் இயந்திரங்கள் என இந்த நடவடிக்கையை ஒட்டி மிகப் பெரும் கட்டமைப்பு செலவுகள் வங்கிகளுக்கு கூடுதல் சுமையாக இருந்தன.

இந்தியா போன்ற கிராமப்புறங்கள் நிறைந்த பல தரப்பு மக்கள் வாழும் நாட்டில். ஒரே நாளில் பணத்தை செல்லாது என அறிவிக்க என்ன அவசரம் என்பது இப்போதும் புரியவில்லை.

ஒட்டுமொத்தமாக பணமதிப்பு நீக்கத்துக்காக அரசு முன்வைத்த அனைத்து காரணங்களும் அதன் நோக்கத்தை நிறைவேற்றவில்லை.

இந்த உண்மையை உணரும்போது, மோடி பிரதமர் பதவியை இழந்திருப்பார் என்று தீக்கதிர் பத்திரிகையாளர் ஐவி.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags: