Type to search

மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையுள்ள அமைப்பு இடதுசாரி அமைப்பு தான்! – லெனின்பாரதி பேச்சு!

India Top Story India Trending Tamil nadu

மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையுள்ள அமைப்பு இடதுசாரி அமைப்பு தான்! – லெனின்பாரதி பேச்சு!

Share

மேற்கு தொடர்ச்சி மலை திரைப்பட இயக்குநர் லெனின் பாரதியுடன் சந்திப்பு – கலந்துரையாடல் என்ற நிகழ்ச்சி தமிழ் பண்பாட்டு மையம் மற்றும் பதியம் திரைப்பட இயக்கம் சார்பில் ஞாயிறன்று திருப்பூரிலுள்ள அரிமா அரங்கில் நடைபெற்றது.trusted organization among people – lenin barathi talk india tamil news

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் பண்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் செந்தில் தலைமை வகித்தார். பதியம் திரைப்பட இயக்கம் பாரதிவாசன் வரவேற்றார்.

தமுஎச நிர்வாகி நடேசன், எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன், உறுமின் பட இயக்குனர் சக்தி ஆகியோர் கலந்து கொண்டனர், முன்னதாக குழந்தைகளுக்கான உலக குறும்பட திரையிடல் நிகழ்ச்சியை தமுஎகச மாவட்ட நிர்வாகி தாண்டவக்கோன் ஒருங்கிணைத்தார்.

இதைத்தொடர்ந்து மேற்கு தொடர்ச்சிமலை திரைப்படத்தின் இயக்குநர் லெனின்பாரதி பேசியதாவது, என் அப்பா இடுக்கி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினரா இருந்தாரு. அவரு இடுக்கி மலையில, மலை சார்ந்து இருக்கக்கூடிய மக்களுக்கு எல்லாம் கட்சிய காட்டுனவரு.

அதுமட்டுமல்லாமல் இடுக்கி மலையில இருக்க ஏலக்காய் தோட்ட தொழிலாளர் சம்மேளனத்துல இருந்தவரு. நான் 11 வயசு வரைக்கும் அங்க தான் இருந்தேன்.

சின்ன பையனா இருக்கும்போது அந்த மலையில வேலை செய்யுற தொழிலாளர்களுக்கு எல்லாம் சம்பளம் அதிகமா கேட்டு போராடுவாங்க.

அதுமட்டும்மல்லாம, என் அம்மாவும் ஏலக்காய் தோட்டத்துல வேலை செய்வாங்க. நாங்க எல்லாம் எங்க அத்தை, மாமா வீட்டுல விளையாடுவோம். அப்பா, அம்மா சம்பளம் வாங்கீட்டு நமக்கு சாப்பிட ஏதாவது வாங்கீட்டு வருவாங்களானு எதிர்பாப்போம். அது மாதிரியான ஈர்ப்பு தான் என்னை மேற்கு தொடர்ச்சி மலை போன்ற படம் எடுக்க வெக்க முடிஞ்சது.

அப்போ, என் அப்பா இளையராஜா கூட இசை குழுவுல இருந்தாரு. அப்படிதான் எனக்கு இளையராஜாவுடன் அறிமுகம். அப்ப இருந்து இப்ப வரைக்கும் மக்கள் மத்தியில பெரும் நம்பிக்கை உள்ள அமைப்புனா அது இடதுசாரி அமைப்புதான்.

ஏன்னா அவங்க தான் இந்த சமூகத்துக்கு எந்த பிரச்சனையினாலும் உடனே வருவாங்கங்குற நம்பிக்கை மக்கள் மனசுல நல்லாவே இருக்கு.

சிலர் அதன் மீதும் கூட விமர்சனங்களை வைக்கிறார்கள். ஆனால், மக்கள் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில் இப்ப இல்லை.

இடதுசாரிகளை போல் மக்கள் மனதை கவரும் வகையில் உண்மை தன்மையோடு விமர்சிக்க வேண்டும்.

எனது மேற்கு தொடர்ச்சி மலை படத்தில் கூட கடைசி சீனில் கொலை செய்து சிறைக்கு சென்று அவரது குடும்பம் கஷ்டப்படும் காட்சி வரும்.

அதை சிலர் கம்யூனிஸ்ட்களை நம்பி போனால் இது தான் நிலைமை என்று விமர்சிச்சாங்க. கம்யூனிஸ்டுகள் பின்வருவதை முன் சொல்லுபவர்கள் என்று சுருக்கமாக பதில் சொன்னேன்.

பொதுவாக இந்த காலத்துல யாரு விவசாயம் பன்னாலும் அதான் நிலைமை. அதை யாரும் மறுக்க முடியாது. என்னுடைய படத்துல 44 வருச கதைய 18 வருசத்துல சுருக்கி எடுத்துருக்கேன்.

மக்களுக்கு எதிராக செயல்படும் மக்கள் விரோத சக்திகள் 100 ஆண்டுகள் செயல் அறிக்கையை தயாரிச்சு வெச்சிருக்காங்க.

ஆனா மக்களுக்காக போராடுற உண்மையான இயக்கங்களான இடதுசாரிகள், அதை விட வேகமா இருக்கனும்.

ஆளும் கட்சிகள் தனி மனித பெயர்களை முன்னிலைப் படுத்துகிறார்கள். ஆனால், நாம் அவர்களை மட்டுமே விமர்சிக்காமல் அவர்கள் சார்ந்த கட்சியை தான் விமர்சிக்க வேண்டும்.

மதவாத சக்திய விட மிகவும் நுட்பமான தந்திரத்தோடு செயல்படனும். இந்த சமூக மக்களுக்காக போராடுற நம்மை, நம்மளோட பிரதான எதிரி யாருங்கிறத கண்டுபிடிச்சி அவன எதிர்க்கணும். அதுக்கு எல்லா இடதுசாரி அமைப்புகளும் இணைந்து போராடணும்.

மதவாத கட்சியில இருக்க உயர்மட்ட தலைவன் தான் சாமனிய மக்களுக்குள்ள மதவெறிய திணிக்குறான். அத நாம் எல்ல ஒன்னு சேந்து போராடி எதிர்கொள்ளனும்.

மேலும், மாமேதை காரல் மார்க்ஸ் சொன்னதை போல், முதலாளித்துவம் ஒருநாள் தன்னைதானே வீழ்த்திக் கொள்ளும்.

மேற்கு தொடர்ச்சி மலை படத்தில் நாம் மலை சார்ந்து பிழைப்பு நடத்தும் மக்களை பற்றி பேசினோம்.

அந்த மலை சார்ந்து பிழைப்பு நடத்தும் மக்களில் 90 சதவிகிதம் தலித் சமூகத்தை சார்ந்த மக்கள். நான் நேரில் பார்த்து சொல்கிறேன்.

இன்னும் தனக்குனு சொந்தமா ஒரு காணி நிலம் வேணும்னு ஏலக்காய் மூட்டைய மலை மேலேயும், கீழேயும் செமந்துட்டு வரவங்க நிறைய பேர் இருக்காங்க.

அவர்களுக்கு எல்லாம் நியாயம் கிடைக்குற விதமா தான் இந்த படம் அமைஞ்சிருக்கு. இவ்வாறு லெனின் பாரதி பேசினார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags: