எச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க முடியாது – உயர்நீதிமன்றம்
Share

புதுக்கோட்டை அருகே மெய்யபுரத்தில் குறிப்பிட்ட வழியில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்வதற்கு போலீஸார் தடைவிதித்த நிலையில், அவர்களுடன் பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.order ஹெச் ராஜா arrested immediately high court
உயர் நீதிமன்றத்தை விமர்சித்த அவர், காவலர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் எச்.ராஜாவின் இச்செயலை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உயர் நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய புகாரில் புதுக்கோட்டை திருமயம் காவல் நிலையத்தில் எச்.ராஜா மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்தது.
மேலும், 4 வாரத்திற்குள் எச்.ராஜா நேரில் ஆஜராகி இது தொடர்பான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் சூர்ய பிரகாஷ் எச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அவரை உடனடியாக கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க முடியாது என கூறியுள்ளது.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- மகளின் திருமணத்திற்காக தந்தை செய்த காரியத்தால் சர்ச்சை
- கோவாவின் முதல்வர் உடல்நிலை கவலைக்கிடம் – டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை
- பொறியியல் துறை சார்ந்த சிறந்த கண்டுபிடிப்பிற்கான விருதை பெற்ற சென்னை மாணவி
- சிறுவனுக்கு பாலியல் தொல்லை தந்த ஓரினச்சேர்க்கை இளைஞர்
- கோவில்-குளம் சுற்றி வரும் பிரதமர் மோடி
- நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் விழாவில் பங்கேற்று சுற்றித்திரியும் ஹெச். ராஜா