குழந்தை கடத்த வந்ததாக மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் மீது தாக்குதல்
Share

கோவை அரசு மருத்துவமனையில் குழந்தையை திருட வந்ததாகக் கூறி, மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரைப் பிடித்த பொதுமக்கள் கடுமையாகத் தாக்கினர்.attack mentally challenged young man kidnaps child
கோவை அரசு மருத்துவமனையில் குழந்தை திருட்டு புகாரையடுத்து, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை இளைஞர் ஒருவர், மருத்துவமனையில் உள்ள தாய் சேய் நல பிரிவில் சுற்றித்திரிந்துள்ளார்.
சந்தேகமடைந்த பெண் காவலாளியான கீதா என்பவர், இளைஞரை பிடிக்க முயற்சித்துள்ளார்.
இதனால் அச்சமடைந்த இளைஞர், அவரை தள்ளிவிட்டு ஓட முயற்சித்துள்ளார். கீதாவின் கூச்சலையடுத்து திரண்ட, காவலாளிகள் மற்றும் பொதுமக்கள் இளைஞரை பிடித்து கடுமையாக தாக்கினர்.
தகவலறிந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், அந்த இளைஞர் மதுரையை சேர்ந்த கார்த்தி என்பதும், மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த இளைஞரை போலீசார் விடுவித்தனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- மீண்டும் கும்புடுப்போட தயாராகும் ஈபிஎஸ் – ஓபிஎஸ்
- சென்னையில் ஐ.டி நிறுவனம் திண்டாட்டம் – வருமானவரி அதிகாரிகள் சோதனை
- ராஜீவ் காந்தியைப்போல… மோடியை கொல்ல மாவோயிஸ்ட் சாதி – 5 பேர் கைது
- மத்திய அரசைக் காட்டிலும் 20 சதவிகிதம் அதிக நிதி – கேரளத்திற்கு அள்ளித்தந்த பொதுமக்கள்
- தனிமை சிறையில் நான் படிக்கும் புத்தகம் – திருமுருகன் காந்தி பேட்டி
- ஆன்லைன் பத்திரப்பதிவு விண்ணப்பத்தில் ஆங்கிலம் நீக்கம்? – தமிழ்நாடு அரசு
- 70 குழந்தைகள் இறப்பில் ஆதித்யநாத் பொய் சொல்கிறார் : டாக்டர் கபீல்கான் கொந்தளிப்பு
- நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தந்தை ஹரிகிருஷ்ணா விபத்தில் உயிரிழப்பு
- திமுக தலைவரானார் ஸ்டாலின் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- மணப்பாறை அருகே சாலை விபத்து – 4 பேர் பலி
- மறக்க முடியுமா கலைஞரை – திரையுலக பிரபலங்கள்