13 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இரண்டு நடுகற்கள் கண்டுபிடிப்பு
Share

சேலம், ஏற்காடு அருகே 13 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இரண்டு நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளது.india tamil news two instrumental discovery 13th century
சேலம் மாவட்டம், சேர்வராயன் மலையின் தொல்குடிகளின் பண்பாட்டை அறியும் நோக்கோடு ஏற்காடு வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த நீலகிரி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான குழுவினர் மாரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட அரங்கம் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் கல்லுசிலைக்காடு என்ற வனப்பகுதியில் 13 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இரண்டு நடுகற்கள் கண்டறியப்பட்டது.
இந்த கற்கள் தான் சார்ந்த சமூகத்தை காக்கும் பொருட்டே, அரசனுக்காகவே, ஆனிரை கவரவே அல்லது ஆனிரை மீட்கவே வேண்டி போரிடும்போது விழ்ப்புண்பட்டு மடியும் வீரனின் வீரத்தை போற்றும் வகையில் நடப்படும் வீர நடுகற்கள் ஆகும்.
முதல் நடுகல்லில் உள்ள வீரனின் இடது கையில் வில்லேந்தியும், வலது கையில்வாள் ஏந்திய நிலையில் தலை முடி உச்சி மேல்முடிந்தும், இடையில் அரையாடை மட்டும் அணிந்தபடி சமர் புரியும் நிலையில் காணப்படுகிறது.
இது போரில் எதிர்த்து நின்று வீழ்ந்த பட்டான் என்பதை குறிக்கும் வகையில் வீரனின் இடுப்பில் அம்பு முன்னிருந்து பாய்ந்தது போல் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது நடுகல் மூன்று அடி உயரமும் இரண்டு அடிஅகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
இதில் வீரனின் இடது கையில் வில்லேந்தியவாறும், இடையில் உள்ள வாளை வலது கையில் பிடித்திருப்பது போலவும், முடி உச்சியில் முடிந்தபடி அரையாடை அணிந்துபோர் புரியும் நிலையிலும் மார்பில் அம்பு பாய்ந்துள்ள நிலையில் வீரனின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நடுகற்களும் வீரக்கல் வகையைச் சார்ந்ததாகும். இந்த நடுகற்களின் அருகில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கைக்கோடாரிகளும், அவற்றை கூர்படுத்தும் சானக்கல்லும் இப்பகுதியில் கண்டறிவது இதுவே முதல் முறையாகும்.
மேலும் எருதுகட்டாம் பாறை என்ற பகுதியில் சிறு கற்களை கொண்டு அடுக்கி அதன் மேல் தன் முன்னோரின் முதன்மையான ஆணைக் குறிக்கும் வகையில் 6 அடி உயர நெடுங்கல்லும், பெண்ணைக் குறிக்கும் வகையில் 5 அடி உயர நெடுங்கல்லும் நடப்பட்டுள்ளது.
இதனை இப்பகுதி மக்கள் தம் முன்னோர்களின் முதன்மையான பாட்டன் நினைவாக நடப்பட்டுள்ளதால், பாட்டன் கல் என்று அழைக்கின்றனர்.
இது பெருங்கற்காலத்தைச் சேர்ந்த ஈமச் சின்னமாகும். இவ்வகையான கல் ஏற்காட்டில் வேறு எந்தப் பகுதியிலும் இல்லை.
பாட்டன் கல்லும், நடுகற்கற்களும் கண்டறிவது இதுவே முதன்முறையாகும் என ஆய்வு குழுவினர் தெரிவிக்கின்றனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- கோவிலில் கொள்ளை முயற்சி – மடக்கிப்பிடித்தவருக்கு கத்திக்குத்து
- ஒரே நாளில் 5 ரவுடிகளுக்கு குண்டாஸ் – கைதிகள் வேலூர் சிறைக்கு மாற்றம்
- ஹைதராபாத் இரட்டைக் குண்டுவெடிப்பு வழக்கு – இன்று வெளியாகிறது தீர்ப்பு
- போதை மருந்து கொடுத்து சிறுமியை கற்பழித்த காவல் அதிகாரி
- போட்டியின்றி தி.மு.கவின் தலைவராகிறார் மு.க.ஸ்டாலின் – நாளை பதவியேற்பு
- போலீஸ் விசாரணைக்கு போன மாணவன் – ரயில்வே டிராக்கில் தலை துண்டிப்பு
- எடப்பாடி பழனிசாமி : தி.மு.கவுடன் மறைமுக கூட்டணியில் உள்ளார் – டி.டி.வி தினகரன் சாடல்
- என்னை முதலமைச்சர் ஆக்கினாள் என் முதல் கையெழுத்து இதுதான் – கமல் பேட்டி
- பாராளுமன்ற தேர்தலில் DMDK தனித்து போட்டியிடும் – விஜயகாந்த்
- சிறையில் திருமுருகன் காந்தி உடல்நலக்குறைவால் அவதி