போலீஸ் விசாரணைக்கு போன மாணவன் – ரயில்வே டிராக்கில் தலை துண்டிப்பு
Share

பொன்னேரி அருகே ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற கல்லூரி மாணவர், ரயில்வே டிராக்கில் சடலமாக மீட்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.india tamil news student went police investigation – head railway track
பொன்னேரி அருகேயுள்ள சின்னக்காவனம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி இவரின் மகன் மௌலீஸ்வரன்.
பொன்னேரி உலகநாதன் நாராயணசாமி அரசினர் கலைக் கல்லூரியில் பி.ஏ.காமர்ஸ் இரண்டாம் ஆணடு படித்து வருகிறார்.
நேற்று முன் தினம் பொன்னேரி சின்னக்காவனம் பகுதியில் நண்பர்களுடன் மௌலீஸ்வரன் பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது கும்மிடிப்பூண்டி ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார், மௌலீஸ்வரனை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணைக்குக் அழைத்து போயுள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை கும்மிடிப்பூண்டிக்கும்- எளாவூருக்கும் இடையிலான தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மௌலீஸ்வரன் உடல் கிடந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் வீட்டை விட்டுக் கிளம்பிய மகன், ரயில்வே ட்ராக்கில் அரை நிர்வாண நிலையில் சடலமாகக் கிடந்ததை அறிந்த மாணவனின் பெற்றோர் ரயில்வே போலீஸை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மாணவன் இறப்புக்கு நியாயம் கேட்டு பொன்னேரி ஆர்.டி.ஒ அலுவலகத்தையும் அவர்கள் முற்றுகையிட்டனர்.
அது தவிர பொன்னேரி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.
இதனால் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விசாரணையின் போது அவர் ஸ்டேஷனில் இருந்து பயந்து தப்பித்து ஓடி ரயில்வே ட்ராக்கில் விழுந்து இறந்தத் தகவலே இப்போதுதான் எங்களுக்கேத் தெரிய வந்திருக்கிறது’ என்று சொல்லி இருக்கிறார்கள் போலீஸார்.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என்கின்றனர் அவரது உறவினர்கள்.
இதனிடையே கும்மிடிப்பூண்டி ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் 2 பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- எடப்பாடி பழனிசாமி : தி.மு.கவுடன் மறைமுக கூட்டணியில் உள்ளார் – டி.டி.வி தினகரன் சாடல்
- என்னை முதலமைச்சர் ஆக்கினாள் என் முதல் கையெழுத்து இதுதான் – கமல் பேட்டி
- பாராளுமன்ற தேர்தலில் DMDK தனித்து போட்டியிடும் – விஜயகாந்த்
- சிறையில் திருமுருகன் காந்தி உடல்நலக்குறைவால் அவதி
- காதல் மனைவிக்காக கணவன் செய்த கொடுமையான காரியம்
- 105 அடி உயரத்தில் உள்ள குடிநீர்த் தொட்டியின் மீது ஏறி ஆய்வு செய்த பெண் மாவட்ட ஆட்சியர்
- ஜீன்ஸை அணிந்த தம்பி – ஆவேசத்தில் குத்திக்கொன்ற அண்ணன்
- கொள்ளிடம் அணைக்கு திடீர் காய்ச்சல் – முதலமைச்சர் எடப்பாடி பேட்டி
- பெண்களின் கர்ப்பை சூறையாடும் காமுகர்களுக்கு விரைவில் தண்டனை – பிரதமர் நரேந்திர மோடி
- கணவன், மனைவி ஸ்பாட் அவுட் – சுபநிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பும்போது நேர்ந்த சோகம்
- சாமி எங்களைக் கொஞ்சம் பாருங்க – தண்ணியில் மிதக்கும் கீழகுண்டலாபாடி மக்கள் (காணொளி)
- விசாரணையில் பெண் மார்பகத்தை பிடித்த காவல் அதிகாரி – வெளுத்துவங்கிய வளர்மதி (காணொளி)