என்னை முதலமைச்சர் ஆக்குங்கள் : என் முதல் கையெழுத்து இதுதான் – கமல் பேட்டி
Share

நான் முதலமைச்சரானால் லோக் பால் சட்டத்தை வலிமையாக்கும் வகையில், என்னுடைய முதல் கையெழுத்து இருக்கும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.india tamil news first signature made chief minister – kamal interviewed
பெண் தொழில்முனைவோர்களுக்கான விருது வழங்கும் விழா மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இதில் 11 பிரிவுகளில் 35 பெண்களுக்கு விருதுகளும், மேலும் 9 பெண்களுக்கு சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெண்களுக்கு, கமல்ஹாசன் விருது வழங்கினார். பின்னர் பேசிய அவர், `மக்களின் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளதால் அரசியலுக்கு வந்துள்ளேன்.
அரசியல் எனும் சாக்கடையை சுத்தம் செய்ய அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும். அரசியலைக் கண்டு ஒதுங்கி நிற்காமல், பெண்களும் அரசியலில் தவறாமல் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும்’ என்றார்.
முதலமைச்சரானால் உங்களுடைய முதல் கையெழுத்து எதற்கு என்று நடிகர் பார்த்திபன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த கமல்,`தற்போதைய லோக்பால் சட்டம் வெறும் கண் துடைப்பாகவே உள்ளது. நான் முதல்வராக ஆனால் மீண்டும் லோக்பால் சட்டத்தை வலிமையாக்கும் வகையில் என் முதல் கையெழுத்து போடுவேன்’ என்றார்.
மேலும் திமுக தலைவராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த கமல், கலைஞர் நினைவேந்தல் நிகழ்வுக்கு அழைப்பு வந்தால் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- பாராளுமன்ற தேர்தலில் DMDK தனித்து போட்டியிடும் – விஜயகாந்த்
- சிறையில் திருமுருகன் காந்தி உடல்நலக்குறைவால் அவதி
- காதல் மனைவிக்காக கணவன் செய்த கொடுமையான காரியம்
- 105 அடி உயரத்தில் உள்ள குடிநீர்த் தொட்டியின் மீது ஏறி ஆய்வு செய்த பெண் மாவட்ட ஆட்சியர்
- ஜீன்ஸை அணிந்த தம்பி – ஆவேசத்தில் குத்திக்கொன்ற அண்ணன்
- கொள்ளிடம் அணைக்கு திடீர் காய்ச்சல் – முதலமைச்சர் எடப்பாடி பேட்டி
- பெண்களின் கர்ப்பை சூறையாடும் காமுகர்களுக்கு விரைவில் தண்டனை – பிரதமர் நரேந்திர மோடி
- கணவன், மனைவி ஸ்பாட் அவுட் – சுபநிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பும்போது நேர்ந்த சோகம்
- சாமி எங்களைக் கொஞ்சம் பாருங்க – தண்ணியில் மிதக்கும் கீழகுண்டலாபாடி மக்கள் (காணொளி)
- விசாரணையில் பெண் மார்பகத்தை பிடித்த காவல் அதிகாரி – வெளுத்துவங்கிய வளர்மதி (காணொளி)