திமுக தலைவர் பதவிக்கு தேர்தல்: கருணாநிதி சமாதியில் ஆசி பெரும் ஸ்டாலின்!
Share

{ Elections DMK president post }
திமுக தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை மறுநாள் நடக்க உள்ள நிலையில், இன்று கருணாநிதி சமாதியில் வேட்புமனுவை வைத்து ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
திமுக தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகின்றது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
தலைவர் பதவிக்கு மு.க ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரை முருகனும் போட்டியிடுகின்றனர்.
இன்று வேட்புமனு தாக்கல் செய்வதை ஒட்டி காலை மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு வந்த மு.க ஸ்டாலின், வேட்புமனுவை வைத்து ஆசி பெற்றார். அதேபோல, துரை முருகனும் தனது வேட்புமனுவை வைத்து அஞ்சலி செலுத்தினார். இதனை அடுத்து, அவர்கள் அண்ணா அறிவாலயம் புறப்பட்டுச் சென்றனர்.
அங்கு இருவரும் வேட்புமனுவை தாக்கல் செய்கின்றனர். எதிர்த்து வேறு யாரும் போட்டியிட வாய்ப்பு இல்லை என்பதால், இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Tags: Elections DMK president post
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :