சிறையில் திருமுருகன் காந்தி உடல்நலக்குறைவால் அவதி
Share

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.india tamil news tirumurugan gandhi jail due ill health
நாகை மாவட்டம், சீர்காழியில் கடந்த ஏப்ரல் மாதம் அன்று அம்பேத்கர் பிறந்த நாள் விழாப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தகூட்டத்தில் பங்கேற்ற திருமுருகன்காந்தி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவும், பிரிவினையை தூண்டும் விதமாகவும் பேசியதாக மயிலாடுதுறை திருவெண்காடு காவல்துறையினர் அவர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை சீர்காழி நீதித்துறை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி செல்லப்பாண்டியன் முன்பு திருமுருகன்காந்தி ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது திருமுருகன் காந்தி சார்பாக மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்கத்தலைவர் வேலு குபேந்திரன் ஆஜரானார்.
சீர்காழியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பெரியார், அம்பேத்கார் சொன்ன கருத்துகளையே திருமுருகன் காந்தி பேசினார் என வழக்கறிஞர் வேலு நீதிபதியிடம் தெரிவித்தார். திருமுருகன் காந்தியும் அதையே நீதிபதியிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, திருமுருகன் காந்தி தொடர் வயிற்றுப்போக்கால் கடும் அவதிப்பட்டு வருகிறார் அவருக்கு உடனடி மருத்துவ சிகிச்சைகள் அளிக்க வேண்டும் என நீதிபதியிடம் வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதை கேட்ட நீதிபதி செல்லபாண்டியன், தனியார் மருத்துவமனையிலோ, அரசு மருத்துவமனையிலோ சட்டத்திற்கு உட்பட்டு திருமுருகன் காந்திக்கு மருத்துவ வசதிகள் செய்து தர வேண்டும் என காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணையை செப். 6-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இதனிடையே, தீவிர வயிற்றுப்போக்கால் அவதிப்படும் திருமுருகன் காந்தி எண்டோஸ்கோபி பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் வழக்கு விசாரணைக்காக சென்னை அழைத்துச் செல்லும் போது ராஜீவ் காந்தி மருத்துவமனை அல்லது சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் பரிசோதனையை செய்தால் சரியாக இருக்கும் என்றும் தன் வழக்கறிஞரிடம் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- காதல் மனைவிக்காக கணவன் செய்த கொடுமையான காரியம்
- 105 அடி உயரத்தில் உள்ள குடிநீர்த் தொட்டியின் மீது ஏறி ஆய்வு செய்த பெண் மாவட்ட ஆட்சியர்
- ஜீன்ஸை அணிந்த தம்பி – ஆவேசத்தில் குத்திக்கொன்ற அண்ணன்
- கொள்ளிடம் அணைக்கு திடீர் காய்ச்சல் – முதலமைச்சர் எடப்பாடி பேட்டி
- பெண்களின் கர்ப்பை சூறையாடும் காமுகர்களுக்கு விரைவில் தண்டனை – பிரதமர் நரேந்திர மோடி
- கணவன், மனைவி ஸ்பாட் அவுட் – சுபநிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பும்போது நேர்ந்த சோகம்
- சாமி எங்களைக் கொஞ்சம் பாருங்க – தண்ணியில் மிதக்கும் கீழகுண்டலாபாடி மக்கள் (காணொளி)
- விசாரணையில் பெண் மார்பகத்தை பிடித்த காவல் அதிகாரி – வெளுத்துவங்கிய வளர்மதி (காணொளி)