சர்ச்சைகளுக்கிடையே மதுசூதனன் தலைமையில் இன்று அதிமுக செயற்குழு கூட்டம்
Share

அ.தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.india tamil news today’s aiadmk meeting led madhusudhanan among controversies
கூட்டத்துக்கு அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்குகிறார். கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகிக்கின்றனர்.
அ.தி.மு.க. செயற்குழு சென்னையில் 20-ந் தேதி நடக்க இருந்தது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு காரணமாக செயற்குழு ஒத்தி வைக்கப்பட்டது.
இன்று நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 250-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க உள்ளனர்.
கூட்டத்தில் கலந்துகொள்ள வருபவர்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டு இருந்த அழைப்பிதழ்களை கொண்டு வரலாம் என்று அ.தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.
மேலும் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலை எப்படி எதிர்கொள்வது? குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.
நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்வி, மீண்டும் நடந்து விடக்கூடாது என்பதில் அக்கட்சி உறுதியாக உள்ளது.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- சென்னை ஒரு தாய் வீடு தான்- ஹர்பஜன் சிங் மெட்ராஸ் தின வாழ்த்து
- இது சிலையா – மெரினாவை ஆச்சர்யப்படுத்திய சிற்பக் கலைஞர்
- தவறான அரசியல் கருத்துக்களை பரப்பும் பக்கங்களை முடக்கியது பேஸ்புக்
- ஸ்ரீ ரெட்டி விவகாரத்தில் ராகவா லாரன்சுக்கு நடிகர் வாராகி சவால்
- மாணவியை கற்பழித்து கர்ப்பம் – கருக்கலைப்பு செய்ய ஆசிரியர் முயற்சி