கேரளாவுக்கு திருநங்கைகள் வெள்ள நிவாரணம் – ரூ.30 ஆயிரம் வழங்கி உதவிகரம்
Share

கேரளா மழை வெள்ளத்தில் பாதிக்கப்படவர்களுக்கு திருப்பூர் திருநங்கைகள் சார்பில் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் திங்களன்று திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கினர்.india tamil news transgender help flood relief kerala – rs.30 thousand
திருப்பூர் மாவட்ட பெரிய வீடு திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.30 ஆயிரம் மதிப்பிலான சமையல் பொருட்களை திங்களன்று மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் பூங்கோதையிடம் அளித்தனர்.
இதுகுறித்து திருநங்கைகள் கூறியதாவது: திருப்பூர் நெருப்பெரிச்சல், அம்மாபாளையம் பகுதிகளில் தங்கியுள்ளோம்.
திருப்பூரில் பெரிய வீடு திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் 60 பேர் உள்ளோம். நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து கேரளா மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சிறு உதவி செய்ய வேண்டும் என நினைத்தோம்.
அதன்படி, எங்களது ஒவ்வொருவரது இரண்டு நாள் வருமானமான ரூ.500ஐ சேகரித்து மொத்தம் ரூ.30 ஆயிரம் திரட்டினோம்.
இந்த தொகை மூலம் கேரளா மக்களுக்கு தேவையான அரிசி, கோதுமை மாவு, சமையல் எண்ணெய், சானிட்டரி நாப்கின் உட்பட பல்வேறு அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்களை வாங்கினோம்.
மேலும், அவற்றை சமூகநலத்துறை அலுவலரிடம் ஒப்படைத்து, கேரளாவிற்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டோம் என்றனர்.
இதையடுத்து, திருநங்கைகள் அளித்த பொருட்களை மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் பூங்கோதை பெற்றுக்கொண்டு மாவட்ட நிர்வாகம் திரட்டி வரும் நிவாரண சேமிப்பு மையத்திற்கு அனுப்பி வைத்தார்.
திருநங்கைகளின் இந்த முயற்சிக்கு சமூக நல அமைப்பினர், பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- இளவரசன் மர்மமரணம் விசாரணை – முதலமைச்சரிடம் சிங்காரவேலன் அறிக்கை தாக்கல்
- தமிழகத்தின் கிராமப்புற மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
- துயரத்திலும் ஆச்சர்யப்படுத்தும் கேரளா அரசு – நன்றிக்கெட்ட தமிழக அரசு
- மிரட்டிய எச்.ராஜா… – எதற்கும் அஞ்சாத மனுஷ்யபுத்திரன்…
- ஆய்வு என்ற பெயரில் ஹெலிகாப்டரில் ஊரை சுற்றும் குமாரசாமி : சர்ச்சை வீடியோ
- திமுக தலைவர் கருணாநிதிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தள்ளாடி வந்து அஞ்சலி (காணொளி)
- உதவியவர்களுக்கு மாடியில் ‘தேங்க்ஸ்’ எழுதிய கேரள பெண்கள்
- மகாத்மா காந்தியைப்போல் உருவம்கொண்ட மாமனிதர்
- கேரள இயற்கை சீற்றத்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
- கள்ளகாதலனோடு உடலுறவில் ஈடுபட்ட தாயை கண்டித்த சிறுமிக்கு நேர்ந்த கொடுமை
- கணவன் கள்ளக்காதல் உடலுறவு – திட்டமிட்டு கொன்ற மனைவி
- சிறுமியை கற்பழித்து ஆற்றில் வீசிய காமுகன் – போலீஸ் தீவிர தேடுதல்
- கணவருக்கு ‘தலாக்’ சொல்லிவிட்டு காதலருடன் மாயம்
- சென்னை வந்த விஜயகாந்த் – முதல் வேலையாக கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி