சேலம் பசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
Share

{ high court decision selam chennai }
சேலம்-சென்னை பசுமைவழிச் சாலைத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம்-சென்னை பசுமைவழிச் சாலைத் திட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இவ்வழக்கு இன்று நீதிபதிகள் சிவஞானம் தலைமையிலான அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சேலம்-சென்னை பசுமைவழிச் சாலைக்கு (8 வழிச்சாலை) நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மறு உத்தரவு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என்றும் தெரிவித்தனர்.
தற்போதைய திட்டப்படி சாலை அமைக்கும் பகுதியில் 80 சதவீத விவசாய நிலங்களும், 10 சதவீத வனப்பகுதியும் வருகின்றன என்றும், நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பாணையின் படி 5 மாவட்டங்களில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி இருக்க வேண்டும் என்றும் ஆனால் அரசு நடத்தவில்லை என்றும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags: high court decision selam chennai
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
*அகில இந்திய காங்கிரஸ் புதிய பொருளாளர் நியமனம்: ராகுல்காந்தி அறிவிப்பு!
*முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் – கமல்ஹாசன் பேட்டி!
*செல்ஃபி மோகத்தால் குழந்தையை ஆற்றிற்கு பலி கொடுத்த தாய்!
*சிறுமியை கற்பழிக்க முயன்ற காமுகர்களை கடித்துக்குதறிய செல்ல நாய்!
*கேரளாவுக்கு திருநங்கைகள் வெள்ள நிவாரணம் – ரூ.30 ஆயிரம் வழங்கி உதவிகரம்
*6 வயது சிறுமியை கற்பழித்த காமுகன் – நடுரோட்டில் வைத்து எரித்த தந்தை