Type to search

60 வயதை… 30 ஆகா குறைத்து… பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கிழட்டு மன்மதன் கைது

INDIA CRIME India Trending

60 வயதை… 30 ஆகா குறைத்து… பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கிழட்டு மன்மதன் கைது

Share

வயசு 60 ஆகிறது முருகனுக்கு. இந்த வயசில செய்ற காரியமா இது? சின்ன வயசு பையனை போல தலைக்கு டை அடிச்சிக்கிட்டு, பெண்களிடம் தன் வயசை குறைச்சி சொல்லி வழிஞ்சிக்கிட்டு, அதில் சிலரை கல்யாணம் பண்ணி ஏமாத்திக்கிட்டு… இப்படியே காலத்தை ஓட்டியுள்ளார் இந்த முருகன்.india tamil news 60-years-old-man cheating married mass girls

தாம்பரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு பரபரப்புடன் வந்த ஒரு பெண் என்னை ஒருத்தர் 2-வது கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லி, நகை, பணத்தை எல்லாம் பிடுங்கிட்டு ஏமாத்திட்டாரு” என்று கண்களில் தாரை தாரையாக கண்ணீருடன் சொன்னார். கூடவே தன்னை ஏமாற்றியவரின் செல்போன் நம்பரையும் கொடுத்தார்.

தனி பாணி விசாரணை :

அந்த நம்பருக்கு போலீசார் போன் செய்து பார்த்தனர். ஆனால் ரொம்ப நாளைக்கு ஸ்விட்ச் ஆப் என்றே வந்தது. இதனால் கொஞ்சம் திணறிவிட்டனர் போலீசார்.

இந்நிலையில், திரும்பவும் பெண்களை ஒருவர் ஏமாற்றி, நகை, பணம் பிடுங்கி கொண்டார் என செய்தி வரவும் போலீசார் இப்போது களத்தில் இறங்கிவிட்டனர்.

இதற்கென தனிப்படை ஒன்றை அமைத்து தேடுதல் வேட்டையில் இறங்கிவிட்டனர். அப்போது கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்நபரை ஒருவழியாக பிடித்துவிட்டனர்.

அவரிடம் தங்கள் பாணியில் போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். அதை பற்றி போலீசார் இவ்வாறு சொல்கின்றனர்.

உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?

மாங்காடை சேர்ந்த இவரது பெயர் முருகன். கல்யாணமாகி ஒரு மகளும் இருக்கிறாள். இவர் செக்யூரிட்டி சர்வீசில் வேலை பார்த்து வந்தாலும் பண கஷ்டத்தில்தான் இருந்திருக்கிறார்.

அப்போ முருகனுக்கு ஒருசெல்போன் கிடைச்சிருக்கு. அந்த போனில் உள்ள நம்பரை வச்சி 2 பெண்களை பேசியே மயக்கி உள்ளார் முருகன்.

இப்படித்தான் ஏமாத்து வேலை தொடங்கியது. எந்த பெண்ணிடம் பேச ஆரம்பிச்சாலும், “உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா” என்றுதான்.

தலைக்கு டை :

அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக 2-வது கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு அந்த பெண்களிடம் பேசுவார்.

அப்பப்போ பத்திரிகைகளில் 2-வது திருமணத்துக்கு விளம்பரமும் அவரே கொடுத்துப்பார்.

மண்டை நிறைய வெள்ளை முடி இருப்பதால் தலைக்கு டை வேற அடிச்சிப்பார். எப்பவுமே ஃபுல் மேக்-அப். டிப்-டாப் டிரஸ்தான்.

பெண்களிடம் பழகும்போது தனக்கு சம்பளம் 50 ஆயிரம்-னு சொல்லி அளந்துவிடுவார். முருகன் சாதாரண செல்போன்தான் யூஸ் பண்ணுவாராம். ஏன்னா… அடிக்கடி சிம் கார்ட் மாத்திட்டே இருப்பாராம்.

காமிரா இல்லாத இடங்கள் :

பழகும் பெண்களின் கண்ணில் நீர் வர்ற வரைக்கும் தன் சோக கதைகளை பிழிஞ்சி அளந்து விடுவார். அவர்களும் முருகனை நம்பி விடுவார்கள்.

இதில் முருகன் ரொம்ப டீசென்ட்டா பழகறேன்ற பேர்ல, அவங்களை டச் கூட பண்ண மாட்டாராம். இதில்தான் பெண்கள் முருகனை அதிகமாக நம்பி இருக்கிறார்கள்.

அப்பறம் என்ன? இனிதான் முருகன் வேலைய காட்ட ஆரம்பிப்பார். பெண்களை ஹோட்டலுக்கு கூட்டிட்டு போவார்.

அதுவும் சிசிடிவி கேமரா எங்கே இல்லையோ அங்கேதான் கூட்டிட்டு போவார். இப்படித்தான் ஒவ்வொரு பெண்ணிடம் திருமணம் செய்து, நகை, பணங்களை ஆட்டைய போட்டுள்ளார்.

ஓசூர் பெண்ணிடம் தன் வேலையை காட்டியபோது, அது சம்பந்தமான வீடியோவில்தான் ‘நம்ம தலைவர்’ மாட்டிக் கொண்டார்.

ஓசூர் பெண் தான் முதன்முதலில் தாம்பரத்தில் இவரை பற்றி புகார் கொடுக்க துணிந்தவர்.

40 சிம்கார்டுகள் :

இப்போ முருகன்கிட்ட இருந்து கிட்டத்தட்ட 18 சவரன் நகை, ரூ.30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒரு மனிதன் எத்தனை சிம்கார்டுதான் யூஸ் பண்ணுவான்னு ஒரு கணக்கு வேணாமா? நம்ம ‘கல்யாண மன்னன்’ முருகன் 40 சிம் கார்டுகள் வைத்திருக்கிறார்.

அதனையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 40 சிம்கார்டு என்றால் எத்தனை பெண்கள் ஏமாந்து இருக்கிறார்களா இதுவரை கணக்கு தெரியவில்லை.

ஆனால் வந்த புகார்கள் மட்டும் இப்போதைக்கு 3 தான். இனி பாதிக்கப்பட்ட பெண்கள் துணிந்து வந்தால் நடவடிக்கை எடுப்போம்”. இப்படி போலீசார் முருகனை பற்றி கூறினர்.

இந்த வயதில் தேவையா?

60 என்றால் பொதுவாக நாம் மரியாதை தரும் வயது. பெரியவர்கள், முதியவர்கள் என்ற லிஸ்ட்டில் இவர்கள் தானாகவே வந்துவிடுபவர்கள்.

வீட்டில் வயதுக்கு வந்த மகளை வைத்து கொண்டு இந்த வயதில் இப்படி ஆட்டம் போடும் 60 வயது தகப்பனாரை எல்லாம் என்ன சொல்வது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags:

You Might also Like