எய்ம்ஸுக்கு வருகை தந்த நரேந்திரமோடி
Share

வாஜ்பாய் கவலைக்கிடமாக உள்ளதால் அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல்நிலை நேற்று தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியாகியுள்ளது. அவர் பூரண நலம் பெற வேண்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். அவரது உடல்நிலை குறித்து வளர்ப்பு மகள் நமீதாவிடம் கேட்டறிந்தார். வாஜ்பாய்க்கு ஒரு சிறுநீரகம் மட்டுமே செயல்படுவதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் மோடியுடன் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோரும் உடனிருந்தனர். பாஜக முதல் முறையாக ஆட்சியை பிடித்த பெருமையை ஏற்படுத்தியவர் வாஜ்பாய் என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- தொலைத்த மகளை 2 மாதம் கழித்து பிணமா கண்ட தாய், தம்பி கண்ணீர்
- தம்பதியினர் உல்லாசமாக இருக்கும்போது படம்பிடித்து மிரட்டிய கடை முதலாளி
- வறுமையினால் கருவில் இருக்கும் குழந்தையை விலைபேசிய தாய்
- கள்ளத்தொடர்பு வைத்திருந்த அக்காவை கொன்ற தம்பி
- திருமணமான பெண்களைத்தான் சுலபமாக மயக்க முடியும் – கால் டாக்ஸி காமுகன்
- காதலியுடன் உல்லாசம் – வீடியோ வெளியிட்ட காதலன்
- தொப்புள்கொடியுடன் கால்வாயில் கிடந்த குழந்தை – மீட்டெடுத்த பெண்(காணொளி)
- மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சுயசரிதை திரைப்படமாகிறது