திமுகவில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்: தமிழிசை
Share

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின், ஸ்டாலின் தலைவராக்கப்படலாம் எனவும், அழகிரி மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார் எனவும் கடந்த சில நாட்களாகவே செய்திகள் பரவி வருகிறது.
இன்று காலை மெரினா கடற்கரைக்கு குடும்பத்துடன் வந்து கருணாநிதிக்கு சமாதிக்கு மரியாதை செலுத்திய அழகிரி, தனது ஆதங்கத்தை கொட்டவே இங்கு வந்தேன் என தெரிவித்து திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அதோடு, கட்சியில் தனது ஆதங்கம் பற்றி இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கூறுகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஸ்டாலின் மற்றும் திமுக குறித்து பல பரபரப்பான கருத்துகளை அழகிரி கூறி வருகிறார்.
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் “ஒரு சூரியன் மறைந்தபின் சில நட்சத்திரங்கள் தோன்ற முயற்சி செய்கின்றன.
அதேபோல், கட்சியில் பிளவு ஏற்படும்போது அதை திறமையாக கையாண்ட தலைவர்கள் இருக்கிறார்கள். திமுகவில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- பேஸ்புக் ஒருதலை காதலால் பெண்ணுக்கு நடந்த கொடூரம்…
- பிறப்புறுப்பை காட்டினாள் சொர்க்கம் – புது ட்ரெண்ட் சாமியார்
- உங்கள் கேள்விக்கு பதிலளிக்க நான் ரெடி : ஸ்ரீரெட்டி கேள்விக்கு பதிலளித்த சிம்பு
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
- Tamil News
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com