Type to search

ஓரினச்சேர்க்கை உடலுறவுகொள்ளும்போது உயிர்போன கொடூரம்

India Trending Tamil nadu

ஓரினச்சேர்க்கை உடலுறவுகொள்ளும்போது உயிர்போன கொடூரம்

Share

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள மதுக்கூர் ஒலையக்குன்னம் கிராமத்தைச் சேர்ந்த அழகிரி என்ற விவசாயி தனது வயலில் கிடந்த ஒரு பேக்கை எடுத்துப் பார்த்த போது அதில் ஒரு பாஸ்போர்ட் மற்றும் சில பொருட்கள் இருப்பதை பார்த்து அதை மதுக்கூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.india tamilnews homogender deadly horror comes intercourse lgbt

போலீசார் செய்த ஆய்வில் அந்த பாஸ்போர்ட் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பியாரே பெர்னாட்ராபர்ட்ரெனே என்ற பீட்டர் (68) என்பது தெரிய வந்தது. மேலும் அதே பேக்கில் வயாக்கரா போன்ற மாத்திரைகளும் இருந்தது.

மேலும் ஒரு துண்டு சீட்டில் திருமுருகன் ஆவிக்கோட்டை என்ற பெயரும் எழுதப்பட்டிருந்தது. அந்த துண்டுச் சீட்டில் இருந்த திருமுருகனை மதுக்கூர் போலீசார் பிடித்து விசாரனை செய்த போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.

பிரான்ஸ் நாட்டைச் சேரந்த பீட்டர்க்கும் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த ஆவிக்கோட்டை கிராமத்தை சேர்ந்த திருமுருகன் (29) என்பவருக்கும் கடந்த 5 வருடத்திற்கு முன்பு பழக்கம் இருந்துள்ளது.

திருமுருகன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் படித்துக் கொண்டிருக்கும் போது மகாபலிபுரத்துக்கு சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பீட்டருக்கும், திருமுருகனுக்கும் பீச்சில் முதல் முறையாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் கடந்த 5 ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது. முதல் பழக்கத்திலிருந்து இவர்களுக்குள்ளும் ஓரினச்சேர்க்கை பழக்கம் இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 3ம் தேதி பீட்டர் திருச்சிக்கு வந்துள்ளார். அதனை தொடர்ந்து கடந்த 5ம் தேதி திருமுருகனுக்கு பீட்டர் போன் செய்து உங்கள் ஊரை சுற்றிப் பார்க்க வரவேண்டும் எனக் கூறியுள்ளார்.

அதன்பேரில் திருச்சிக்கு வந்த திருமுருகன் ஒரு காரில் பீட்டரை அழைத்துக் கொண்டு மன்னார்குடிக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அதனை தொடர்ந்து அங்கிருந்து காரில் புறப்பட்டு ஆவிக்கோட்டையில் உள்ள திருமுருகன் வீட்டிற்கு வந்துள்ளனர். தொடர்ந்து வீட்டில் இருவரும் மது அருந்தினர்.

பின்னர் இருவரும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பீட்டருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது திருமுருகன் பீட்டரை கீழே தள்ளியதால் பீட்டர் மயங்கிய நிலைக்கு சென்று அங்கேயே இறந்துவிட்டார்.

உடனே திருமுருகன் தடயங்களை அழிக்க நினைத்து சமையலறையில் பீட்டரின் உடலை பெட்ரோல், டீசலை ஊற்றி, பழைய டயர்களை போட்டு எரித்து விட்டார்.

பின்னர் எரிந்து முடிந்ததும் எலும்பு, சாம்பல், உள்பட்டவற்றை 3 மூட்டைகளில் கட்டி மதுக்கூர் அருகே உள்ள வாட்டாகுடி உக்கடை வாய்க்காலில் வீசி எரிந்துவிட்டார்.

மேலும் பீட்டரின் பையை ஒலையகுன்னம் கிராமத்தில் ஒரு வயலில் வீசியுள்ளார்.

துண்டுச் சீட்டின் அடிப்படையில் போலீசார் திருமுருகனை பிடித்து விசாரிக்கும் போது மேற்கண்ட அனைத்து தகவல்களையும் திருமுருகன் போலீசாரிடம் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீசார் திருமுருகனை கைது செய்து அவரது காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் பீட்டரின் பையிலிருந்து வயாகரா மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் இந்த கொலை சம்மந்தமாக வேறு எதுவும் பின்புலங்கள் உள்ளதா எனவும் விசாரிக்க பட்டுக்கோட்டை டி.எஸ்.பி. செங்கமலக்கண்ணன் தலைமையிலான போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ. அழகர்சாமி, தாசில்தார் சாந்தகுமார் ஆகியோர் முன்னிலையில் உடல் வீசப்பட்ட வாய்க்கால் பகுதியிலிருந்து 3 மூட்டைகளும் எடுக்கப்பட்டு அவையனைத்தும் ஆய்விற்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டு பீட்டரின் உயிர் ஓரினச்சேர்க்கையால் பறிபோனது. ஆனால் ஒரு துண்டுச் சீட்டு காட்டிக் கொடுத்துவிட்டது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags:

You Might also Like