Type to search

எனக்கு ஆக்டோபஸ் புத்தி – புத்தகத் திருவிழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு

India Head Line India Trending Tamil nadu

எனக்கு ஆக்டோபஸ் புத்தி – புத்தகத் திருவிழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு

Share

“இந்த நாட்டில் இனி ஏழைகள் யாரும் இருக்க மாட்டார்கள் என நினைக்கும் ஆட்சி அமைய வேண்டும்” என ஈரோட்டில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் நடிகர் சத்யராஜ் பேசினார்.india tamil news actor sathyaraj talks octopus mind – book festival

ஈரோட்டில், ‘மக்கள் சிந்தனைப் பேரவை’ என்னும் அமைப்பு சார்பில் புத்தகத் திருவிழா கடந்த 13 ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது.

அந்த வரிசையில் 14-வது ஈரோடு புத்தகத் திருவிழா, ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. புத்தகத் திருவிழாவின் ஒரு பகுதியாக, தினமும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தலைப்புகளில் பேசி வருகின்றனர்.

அந்த வகையில், ஆகஸ்ட் 13-ம் தேதி (நேற்று) நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டீங்கிறீங்களே!’ என்ற தலைப்பில் நடிகர் சத்யராஜ் பேசினார்.

சத்யராஜ் பேசுகையில், “எனக்கு ராசி மேல எல்லாம் நம்பிக்கை இல்லை. நான் பெரியார் ஆளு. நடிச்ச முதல் படம் ‘சட்டம் என் கையில்’.

அந்தப் பேருக்கு ஏத்த மாதிரி சட்டம் ஏன் கையில வரணும்னா, அதுக்கு நான் முதலமைச்சரா ஆனாதான் முடியும். நான் கட்சி ஆரம்பிச்சா என் பின்னாடி யார் வருவாங்க. என்னைய நடு ரோட்டுல விட்டுட்டு போயிடுவாங்க.

அந்த வகையில், எனக்கு அந்த அரசியல் ஆசையே இல்லை. பொதுவா எனக்கு இலக்கு, லட்சியம் என எதுவுமே எப்போதுமே இருந்ததில்லை.

நான் ஆக்டோபஸ் மாதிரி. ஆக்டோபஸ் எப்படி எட்டுப் பக்கமும் கைவிட்டு, எங்க இறை கிடைக்குதோ அதை எடுத்து வாயில போட்டுக்கும். அதேமாதிரி எனக்கு எப்போ என்ன கிடைக்குதோ அதை நான் புடிச்சிக்குவேன். அந்த வகையில், எனக்கு ஆக்டோபஸ் புத்திதான்.

40 வருஷத்துக்கு முன்னாடி சென்னைக்கு சினிமா வாய்ப்பு தேடி போறப்ப, நான் டிரைவிங் லைசென்ஸோட தான் போனேன். ஒருவேளை சினிமா நமக்கு கை கொடுக்கலைனா, கார் ஓட்டி பிழைச்சுக்கலாம்னு முடிவோட போனேன்.

கம்பெனி கம்பெனியா ஏறி இறங்குனேன். எங்கயுமே சரியான வாய்ப்பு எனக்கு கிடைக்கலை. டிரைவிங் லைசென்ஸ் இருக்குடா கவலைப்படாதடான்னு தெம்புல இருந்தேன். அந்த நேரத்துலதான் எனக்கு கல்யாணம் ஆச்சி.

கல்யாணம் ஆகி பீச்சுக்கு போனப்ப, அங்க இருந்த ஐஸ்கிரீம் கடைகாரன்கிட்ட பேச்சுக் கொடுத்தேன். ஜஸ்கிரீம் வியாபாரத்துல நல்ல காசு கிடைக்குதுன்னு சொன்னான். அதை நம்பி நானும் 35 ஆயிரம் செலவு பண்ணி ஐஸ்கிரீம் கடை போட்டேன்.

அது ஒர்க்கவுட் ஆகலை. அதுக்கப்புறம் சேட்டு ஒருத்தர்கிட்ட ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கி, பழைய இரும்புக்கடை வியாபாரம் பண்ணேன் அதுவும் ஊத்திக்கிச்சு. அதுக்கப்புறமா ஊர்ல ஒரு நண்பன் சொன்னான்னு விவசாயம் செஞ்சேன் அதுவும் சரியா கைகொடுக்கலை.

இப்படி வாழ்க்கையில பல தோல்விகளை மட்டுமே பார்த்த எனக்கு சினிமாதான் கடைசியில் கை கொடுத்துச்சி.

‘நூறாவது நாள்’ படத்துல வில்லன் ரோல் இருக்கு அதுல நடிக்கிறீங்களான்னு மணிவண்ணன் கேட்டார். அந்தப் படத்துல நடிச்சேன். நல்ல வரவேற்பு கிடைச்சது. அதுக்கப்புறம் ’24 மணி நேரம்’னு ஒரு படத்துல, ‘என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டீங்கறீங்களே’ன்னு ஒரு வசனம் பேசுனேன்.

அதுக்கப்புறம் எனக்கு அடிச்ச மழை இப்போ வரைக்கும் பெஞ்சுக்கிட்டு இருக்கு. ஒரே வருஷத்துல 27 படத்துல நான் வில்லனா நடிச்சேன். காணும் இடத்தில எல்லாம் சத்யராஜ் தான் நிறைஞ்சிருந்தேன்.

தீபாவளிக்கு நாலு படம் ரிலீஸ் ஆகுதுன்னா, அந்த நாலு படத்துலயும் நான்தான் வில்லனா இருப்பேன். ரஜினி, கமலுக்கு கதாநாயகி மாறுனாலும் மாறுவாங்க, ஆனா, வில்லன் நான்தான். அப்புறம் கொஞ்ச நாள்ல என்ன நடிகனாக்கிட்டாங்க.

ஒரு ஸ்டேஜ்ல தப்பு தப்பா படம் பண்ணி மார்க்கெட் போச்சு. அந்த நெருக்கடியான நேரத்துல, தந்தை பெரியார் எழுதிய கடவுள், பக்தர்களுக்கு நூறு கேள்வி மற்றும் ஓஷோவோட புத்தகங்களைப் படிச்சேன்.

அப்போதான் அடுத்தவங்க நம்ம பத்தி என்ன நினைப்பாங்களோனு நினைக்கக் கூடாது. நாம நினைக்கிற மாதிரி அடுத்தவங்க இருக்கணுமேன்னு ஆசைப்படவும் கூடாதுன்னு முடிவெடுத்தேன்.

நடிச்சா ஹீரோதான்னு இல்லாம, கிடைச்ச வேடங்களில் நடிக்க ஆரம்பிச்சேன். ஹீரோவா எனக்கு மார்க்கெட் போச்சுன்னாலும், ‘பாகுபலி’ படத்துல கட்டப்பா கேரக்டர்ல நடிச்சி உலகம் முழுக்க எனக்கு புகழ் கிடைச்சது” என பூரித்துப்போனார்.

இறுதியாக, “ ‘நாடோடி மன்னன்’ படத்துல எம்.ஜி.ஆர், ‘பணக்காரர்கள் இருப்பார்கள்; ஏழைகள் இருக்க மாட்டார்கள்’ என்பார்.

தமிழகத்தில் அதுமாதிரி ஒரு ஆட்சி வந்தா போதும். ஏழைகள் இல்லாத ஒரு சமுதாயம் உருவானால் போதும்” என முடித்தார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags:

You Might also Like