வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற இளைஞர்கள்
Share

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே, வீட்டின் பூட்டை உடைத்து திருடிய பீகார் மாநிலத்தை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கதிர்நரசிங்காபுரம் கிராமத்தில் வசித்து வரும் மணிவேல், தனது குடும்பத்தினருடன் கோயிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை, இவரது வீட்டின்பூட்டை இருவர் உடைப்பதை பார்த்த கிராம மக்கள், அவர்களை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த வினோத்குமார் யாதவ் மற்றும் அமர்குமார் யாதவ் என தெரியவந்துள்ளது .
மேலும், இதனை அடுத்து இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- மது அருந்தி போலீசாரிடம் தகராறு செய்த நடிகர் விக்ரமின் மகன் துருவ் கைது (காணொளி)
- திருவாரூரில் உதயநிதி? : திருப்பரங்குன்றத்தில் அழகிரி? – திமுக மாஸ்டர் பிளான்
- வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரள மக்களுக்கு கமல்ஹாசன் உதவி
- உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக விஜயா தஹில் ரமாணி பதவியேற்பு
- உலக சாதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள 5 வயது தேனி மாவட்டம் மாணவி
- வெள்ளத்தில் மிதந்த கேரள குருவாயூர் கோவில் – காணொளி