ஜெயலலிதா பாஷையில் திட்டங்களை அறிவித்த முதல்வர்
Share

யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ மையம் தொடங்கப்படும்.Jayalalithaa announced plans language,india tamilnews
அதுவும் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் 60 கோடி செலவில் அமைக்கப்படும். இந்த மையத்தின் சிறப்புகளாக, இதில் இளநிலை பட்டப்படிப்பு, மேல்நிலை பட்டப்படிப்பு, ஆராய்ச்சி பிரிவுகள் மற்றும் இதனுடன் மருத்துவமனை, மாணவர் விடுதி, மாணவியர் விடுதி, பணியாளர்களுக்கு குடியிருப்பு போன்றவையும் ஏற்படுத்தப்படும்.
மேலும், இயற்கையான சூழலில் யோகா சிகிச்சை, இயற்கை உணவு சிகிச்சை, நீர் சிகிச்சை, மண் சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, அக்குபஞ்சர், அக்குபிரஷர், காந்த சிகிச்சை, நிற சிகிச்சை போன்ற பல சிகிச்சைகள் இந்த மையத்தில் அளிக்கப்படும்.
தமிழகத்திலுள்ள 985 துணை சுகாதார நிலையங்களை ஒருங்கிணைத்த சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்களாக மாற்ற ரூ.82 கோடியே 2 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும்.
அதுமட்டுமல்லாமல் , சென்னை ஸ்டான்லி மருத்துவமணையின் தற்போதுள்ள சிறப்பு அடுக்குமாடி கட்டிடத்தில் கூடுதலாக 3 தளங்கள் ரூ.55 கோடியே 55 லட்சத்தில் கட்டப்படும்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தற்போது கட்டப்பட்டு வரும் புறநோயாளிகள் கட்டிடத்தின் மேல் 5 முதல் 8 வரை 4 தளங்கள் ரூ.42 கோடியே 88 லட்சத்தில் கட்டப்படும். சீர்காழி, திருத்தணி, ஓமலூர், திருச்செந்தூர், பரமக்குடி, பண்ருட்டி, ஆரணி ஆகிய அரசு வட்ட மருத்துவமனைகளுக்கு ரூ.30 கோடியில் தரைத்தளம் மற்றும் 2 தளங்கள் கொண்ட கூடுதல் கட்டிடம் கட்டப்படும்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- மது அருந்தி போலீசாரிடம் தகராறு செய்த நடிகர் விக்ரமின் மகன் துருவ் கைது (காணொளி)
- திருவாரூரில் உதயநிதி? : திருப்பரங்குன்றத்தில் அழகிரி? – திமுக மாஸ்டர் பிளான்
- வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரள மக்களுக்கு கமல்ஹாசன் உதவி
- உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக விஜயா தஹில் ரமாணி பதவியேற்பு
- உலக சாதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள 5 வயது தேனி மாவட்டம் மாணவி
- வெள்ளத்தில் மிதந்த கேரள குருவாயூர் கோவில் – காணொளி