உங்கள் கேள்விக்கு பதிலளிக்க நான் ரெடி : ஸ்ரீரெட்டி கேள்விக்கு பதிலளித்த சிம்பு
Share

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் உள்ள நடிகர்கள் வாய்ப்புத் தருவதாகக் கூறி தன்னுடன் படுக்கையைப் பகிர்ந்துகொண்டு ஏமாற்றி விட்டனர் என சரமாரியாக புகார் செய்தார்.india tamilnews ready respond question: simbu answered sri reddy question
ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டுகிறார் என நடிகர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆதாரம் உள்ளது என்று ஸ்ரீரெட்டி பதில் அளித்தார்.
இந்நிலையில், சமீபத்தில் வார இதழ் ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் இணையதள ரசிகர்களின் கேள்விக்கு நடிகர் சிம்பு பதில் அளித்தார். அப்போது அவரிடம் நடிகை ஸ்ரீரெட்டியும் கேள்வி கேட்டிருந்தார். ‘‘உங்களின் எதிர்கால மனைவியிடம் என்னென்ன தகுதிகளை எதிர்பார்க்கிறீர்கள்?’’ என்று அவர் கேட்டார்.
அதற்கு பதில் அளித்த சிம்பு, “ஸ்ரீரெட்டியின் பட்டியலில் நான் இல்லை என்பது தெரிஞ்சுடுச்சு” என பார்வையாளர்களிடம் சொல்லிவிட்டு, பெண்கள் அதிகாரம் பற்றி பேசினார்.
அப்போது ஆண்கள் செய்யும் எல்லாவற்றையும் பெண்கள் செய்வதுதான் பெண்கள் முன்னேற்றம், அதிகாரம் என நினைத்துக்கொள்கிறார்கள்.
ஆனால், உண்மையில் அது அல்ல. ஒரு பெண்ணாகத்தான் செய்யவேண்டும் என ஆசைப்படும் விஷயங்களை, செய்ய விடாமல் இந்த சமுதாயம் தடுக்கிறது. அதை செய்ய விடுங்கள் என சண்டைபோடுவதே பெண்களின் அதிகாரம். அதற்குத்தான் ஆதரவு தரவேண்டும்.
ஆண்களுக்கு நிகராக இருப்பதுதான் பெண்கள் முன்னேற்றம் என்பதில்லை. ஏற்கனவே ஆண்களுக்கு நிகராகத்தான் இருக்கிறீர்கள்.
நீங்களாக ஆண்களுக்கு நிகராக இல்லை என கற்பனை செய்து கொள்கிறீர்கள். மேலும் பேசுகையில், பெண் என்பதற்கான சில விஷயங்கள் உள்ளது.
வரக்கூடிய மனைவி அந்த புரிதல் உள்ள பெண்ணாக இருந்தால் நன்றாக இருக்கும் என நினைப்பதாக அவர் பதில் அளித்தார்.
இதைத்தொடர்ந்து சிம்புவை பாராட்டி, ஸ்ரீரெட்டி ஒரு வீடியோ படத்தை வெளியிட்டு உள்ளார். ‘நன்றி, சிம்பு சார். என் கேள்விக்கு பதில் அளித்ததற்காக உங்க அப்பா டி.ராஜேந்தரைப்போல் நீங்களும் நல்ல மனிதர். டி.ஆரை நான் மிகவும் மதிக்கிறேன்.’ இவ்வாறு ஸ்ரீரெட்டி அதில் கூறியிருக்கிறார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர் – மு.க.அழகிரி
- திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் சமாதி – நடிகர் விஜய் இன்று அதிகாலை நேரில் சென்று அஞ்சலி (காணொளி)
- அடுத்த தேர்தலில் மாபெரும் வெற்றி – பிரதமர் மோடி உறுதி
- ராணுவத்தில் இணைந்து பணியாற்ற இளைஞர்கள் முன் வரவேண்டும்: கமல்ஹாசன்
- பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை – ஒப்புதல் அளித்தார் குடியரசுத்தலைவர்
- மது அருந்தி போலீசாரிடம் தகராறு செய்த நடிகர் விக்ரமின் மகன் துருவ் கைது (காணொளி)
- திருவாரூரில் உதயநிதி? : திருப்பரங்குன்றத்தில் அழகிரி? – திமுக மாஸ்டர் பிளான்
- வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரள மக்களுக்கு கமல்ஹாசன் உதவி
- உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக விஜயா தஹில் ரமாணி பதவியேற்பு
- உலக சாதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள 5 வயது தேனி மாவட்டம் மாணவி
- வெள்ளத்தில் மிதந்த கேரள குருவாயூர் கோவில் – காணொளி