மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி…
Share

திமுக தலைவர் கருணாநிதி அடக்கம் செய்யப்பட்டுள்ள மெரினா நினைவிடத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். திமுக தலைவர் கருணாநிதி செவ்வாய் கிழமை மாலை மரணம் அடைந்தார். தமிழகம் முழுக்க இது பெரும் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.Stalin’s homage Karunanidhi memorial Marina india tamilnews
பல லட்சம் மக்களை இந்த செய்தி துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று அவரது உடல் மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு வரிசையாக தலைவர்கள் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இப்போதும் தொண்டர்கள், மக்கள் அவரது உடல் இருக்கும் சமாதியை நோக்கி சென்று வருகிறார்கள். இந்த நிலையில் கருணாநிதி அடக்கம் செய்யப்பட்டுள்ள மெரினா நினைவிடத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். திமுக உறுப்பினர்களுடன் சென்று அவர் அஞ்சலி செலுத்தினார்.
மேலும் ,மலர் தூவி அஞ்சலி செலுத்திய ஸ்டாலின் லேசாக கண்ணீர் வடித்தார். அதேபோல் திமுக உறுப்பினர்கள் கலைஞர் கலைஞர் என்று கோஷம் எழுப்பினார்கள். ஆ.ராசா, கே.என்.நேரு, மா.சுப்பிரமணியம், எ.வ.வேலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர். ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் தற்போது அங்கே கூடி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- இருசக்கர வாகனங்கள் மீது காரைக் கொண்டு மோதிய காவலர் : அடித்து உதைத்த பொதுமக்கள்
- மெரினாவில் இடம் மறுப்பு – எடப்பாடி போட்ட கணக்கு : நடந்தது என்ன?
- ஊடகங்களுக்கு அரசு மிரட்டல் : எடிட்டர்ஸ் கில்டு
- பெரியப்பா கருணாநிதி – அப்பா சிவாஜியின் நட்பை பற்றி பிரபு : காணொளி
- ‘சுதந்திர தினத்திற்கு பிளாஸ்டிக் கொடிகள் வேண்டாம்’ – மத்திய அரசு வேண்டுகோள்