இந்திய அளவில் டிரண்டாகும் கலைஞர் ஹேஷ்டேக்
Share

திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக நேற்று மருத்துவ அறிக்கை வெளியான நிலையில், கருணாநிதி, காவேரி மருத்துவமனை ஹேஷ்டேக்குள் இந்திய அளவில் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.Indian artist hashtag,india tamilnews
திமுக தலைவர் கலைஞர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 27ம் தேதி நள்ளிரவு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தொடக்கத்தில் அவர் உடல்நிலையில் சிறிது பின்னடைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு பிறகு கலைஞரின் உடல்நிலை சீராகி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவ சிகிச்சைகளுக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும், வயது முதிர்வு, உடல்நிலை காரணமாக அவர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கடைசியாக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
இதனிடையே கடந்த 5ஆம் தேதி கலைஞரின் உடல்நலம் குறித்து விசாரிக்க குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வருகை தந்தார். அப்போது, அவர் கலைஞரை நேரில் சந்திப்பார் என்றும் துணை குடியரசுத்தலைவர் வெங்கைய்யா நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மருத்துவமனை வந்த போது அவர்கள் கலைஞரை தீவிர சிகிச்சை பிரிவில் சந்திக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகையின் போதும் அதே எதிர்பார்ப்போடு தொண்டர்கள் காத்திருந்தனர்.
அதேபோல், கலைஞர் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையும் வெளியாகவில்லை. இதனால் தொண்டர்கள் மத்தியில் ஒரு பதட்ட சூழ்நிலை உருவானது.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- மனைவி மீதுள்ள கோபத்தினால் 3 மகன்களை ஆற்றில் வீசி கொன்ற தந்தை(காணொளி)
- தற்கொலைக்கு முயன்ற நடிகை கஸ்தூரி : அதிர்ச்சி ட்விட்
- நண்பனின் தாயை மிரட்டி கற்பழித்த உயிர் நண்பன்
- எய்ட்ஸ் முதல் கேன்சர் வரை அனைத்திற்கும் தீர்வு சொல்லும் ஹீலர் பாஸ்கர் – யார் இவர்?
- காதலியின் பேச்சைக்கேட்டு பெண்ணாக மாறிய காதலன்
- நடுரோட்டில் போலீசிடம் சீன் போட்ட இளைஞர் – நடுங்கிய காவலர் (காணொளி)