Type to search

மார்க்சிஸ்ட்டுகள் உருவாக்கிய புதிய போராட்ட வடிவம்

India Top Story Tamil nadu

மார்க்சிஸ்ட்டுகள் உருவாக்கிய புதிய போராட்ட வடிவம்

Share

ஆகஸ்ட் ஒன்னாந்தேதி காலை துவங்கிய போராட்டம் அன்றிரவு 12 மணிக்கு புதிய வடிவம் எடுத்தது. போலீஸ் ரிலீஸ் செய்ததும் மண்டப வாசலில் இருந்து மீண்டும் நடைபயணத்தை தொடங்கினார்கள் தோழர்கள்.கொஞ்சதூரம் நடந்ததும் மீண்டும் கைது செய்து புதிய வரலாற்றுக்கு சாட்சியாகிப்போனது போலீஸ்.india tamilnews new style protest marxists created

இரண்டாம் முறை கைது செய்ததும் ரிமாண்டுதான்…காலையில் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்துறோம் என்றார்கள்.சிறைக்கனவோடு தூங்கப்போனார்கள் தோழர்கள். விடிய்ற்காலையே எழுந்து மண்டபஸ்நானம் முடித்து தோழர்கள் தயாராகிவிட்டனர்.

இவ்வளவு ரோஷமான்னு யோசித்த போலீசார், உப்பில்லாத பொங்கலை காலை உணவாக கொடுத்தனர். பாட்டாளிவர்க்கத்தின் பிரதிநிதிகளின் வியர்வையே உப்பும் கண்ணீரும் நிறைந்ததென போலிசுக்கு புரியாதில்லையா..தோழர்கள் சந்தோசமாக சாப்பிட்டதைக்கண்டு வாய்பிளந்து நின்றனர்.

பத்து மணிக்கெல்லாம் உள்ளூர் தோழர்கள் 100 கட்டைப்பைகளை கொண்டுவந்து கொடுத்தனர்.தோழர்கள் துணிகளை அதில்வைத்து தயாராகிவிட்டனர். பெண் தோழர்கள் காதுல மூக்குல போட்டிருந்தவற்றை கழற்றி கொடுத்துவிட்டு அப்பாடான்னு ரிலாக்சாகிக்கொண்டனர். கோர்ட்டுக்கு போக தோழர்கள் ரெடி..ஆனால் போலிசுக்கோ திணறல். மீண்டும் பேசிப்பார்த்தனர். பேச்சு…பேச்சு…பேச்சு…மாலை வரை பேசிக்கிட்டே இருந்தனர்.

சார்..இப்பவே விட்டுடுறோம்..அப்பிடியே போய்டுங்களேன் என மன்றாடத்தொடங்கினர். ஓ..தாராளமா போறோம்.ஆனால் நடைபயணம்தான் போவோம்..ஓகேவா என தலைவர்கள் மீண்டும் கொடியை தூக்கினர். என்னடா இது.. புலிவாலை புடிச்ச கதையாயிடுச்சேன்னு வேறு வழியில்லாமல் கைது ஆவணங்களை தயார்செய்து இரவு 12 மணிக்கு நீதிபதி வீட்டுக்கே அழைத்துச்சென்றனர்.

நீதிபதி எல்லாத்தையும் கேட்டுவிட்டு சில ஆவணங்களை கேட்டார். போலீசார் அதை எடுத்துவர அலைந்துகொண்டிருந்தது பார்க்க பாவமாத்தான் இருந்தது. ஒருவழியாக எடுத்துவந்து கொடுத்தனர். சரி..பெயில் பெட்டிஷன் போடுங்க.. ஜாமீனில் விடுகிறேன்னு நீதிபதி சொன்னார். அட நீங்கவேற.. தப்பே செய்யாத நாங்க எதுக்கு ஜாமீன் கேட்கணும்.இந்த வழக்கே தப்புங்க என நம் தலைவர்கள் அடுத்த குண்டை வீசினர்.நமது வழக்கறிஞர்கள் சுப்ரீம்கோர்ட்டு வழிகாட்டுமுறைகளை எடுத்துவைத்தானர்.

என்னய்யா இதுன்னு நீதிபதி போலீசை பார்க்க,விடுதலை செய்வதி ஒங்க இஷ்டம் சார்ன்னு அவர்கள் சொன்னார்கள்.அதுக்கு எதுக்குய்யா கைது பண்ணீங்கன்றமாதிரி பார்த்த நீதிபதி, சரிசரி..நானே சொந்த பொறுப்பில் விடுதலை செய்கிறேன்.

இவ்வழக்கே முகாந்திரமற்றது..அதற்கு நாளை கோர்ட்டில் தனி உத்தரவு போடுகிறேன் என்றார்.அப்போது மணி விடிகாலை 2.45. ஜட்ஜ் விடுவித்துவிட்டாலும் தோழர்களுக்கு முகம் வாடிப்போனது.சிறைக்குப்போகும வாய்ப்பு மிஸ்ஸாயிடுச்சேன்னு வருத்தம்.அதுவும் கைதான 13 பெண் தோழர்களுக்குத்தாந் இன்னும் வருத்தம்.

ஜானகியம்மாளும் பாப்பாவும் இருந்த சிறைக்கு போகிறோம் என்ற ஆசையில் மண் விழுந்ததே என கலங்கினர். தோழர் உ.வாசுகியும் சுகந்தியும் அவர்களை ஆறுதல் படுத்தினர்.

நள்ளிரவில் பஸ்ஸ்டாண்ட் அருகே டீ குடித்துக்கொண்டே ஒரு கூட்டத்த நடத்தி, நீதிமன்றத்தில் வழக்கு போட்டு மீண்டும் நடைபயணம் தொடங்குவோம் என கே.பி கம்பீரமாக அறிவித்தார். தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய போராட்ட வடிவத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறோம் என்ற பெருமிதத்துடன் கலைந்து சென்றனர் தோழர்கள்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags:

You Might also Like