எனக்கோ, என் கணவரின் உயிருக்கோ ஆபத்து நேரிட்டால் சசிகலா குடும்பமே பொறுப்பு : ஜெ.தீபா
Share

எனக்கோ, என் கணவர் மாதவனின் உயிருக்கோ, உடமைக்கோ ஏதாவது ஆபத்து நேரிட்டால் சசிகலா குடும்பமே பொறுப்பு என்று ஜெ.தீபா கூறியுள்ளார்.india tamilnews husband’s life risk sasikala family responsible
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா வந்தார். அங்கு ஒரு புகார் மனு கொடுத்தார்.
அந்த மனுவில் :
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த பல ஆண்டுகளாக என் அத்தையோடு இருந்து அவரது சொத்துக்களை சுரண்டி வாழ்ந்த சசிகலாவையும், அவரது உறவினர்களையும் எதிர்த்து குரல் கொடுத்தேன்.
அவர்கள் மீது போலீசில் புகார் செய்தேன். இதனால் சசிகலா தரப்பில் இருந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் எனக்கு மிரட்டல்கள் வரத் தொடங்கியது.
அவரது தூண்டுதலின் பேரில் சிலர் நள்ளிரவு நேரங்களில் என் வீட்டின் வளாகத்தில் நுழைந்து இடையூறுகள் செய்தனர்.
சத்தம் கேட்டு வெளியே வந்ததும் மேல் மாடியில் இருக்கும் என் தம்பி தீபக்கை பார்க்க வந்ததாக கூறினார்கள். தொடர்ந்து பல வழிகளில் மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது.
எனக்கோ, என் கணவர் மாதவனின் உயிருக்கோ, உடமைக்கோ ஏதாவது ஆபத்து நேரிட்டால் சசிகலா குடும்பமே பொறுப்பு.
எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து எனக்கும், என் கணவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டுகிறேன். எனது வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
எனக்கு பலமுறை சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் ஆட்களால் மிரட்டல் வந்துள்ளது. அரசியலில் எனது பெயரை கெடுக்கவும், எனது அரசியல் பணிகளை தடுக்கவும் முயற்சித்து வருகிறார்கள்.
நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும் போது சசிகலா மற்றும் தினகரன் ஆட்களால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று அஞ்சுகிறேன்.
எனவே தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டுகிறேன். இவ்வாறு கூறி உள்ளார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- பிரபல மலையாள நடிகை சாலை விபத்தில் பலி…
- மகன் எடுத்த முடிவு : தாய் – தந்தை தூக்கிட்டு தற்கொலை
- கணவனின் கண்முன்னே 8 மாத கர்ப்பிணியை கற்பழித்த 4 காமுகர்கள்
- கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க குடியரசு தலைவர் வருகை
- ஓடும் மின்சார ரயிலில் பாம்பு : பயணிகள் பயந்து அலறல்
- சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றியதை எதிர்த்து ட்ராபிக் ராமசாமி குரல்
- வீட்டிலேயே சுகப்பிரசவம் பயிற்சி : விளம்பரம் செய்த ஹீலர் பாஸ்கர் கைது
- திருமணம் ஆசையில் காதலி : நண்பர்களோடு சேர்ந்து கற்பழித்த காதலன்
- அக்காவை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்ற தம்பி : நடந்தது என்ன?
- மனைவி தற்கொலை செய்வதை வீடியோ எடுத்து வெளியிட்ட கணவன் : அதிர்ச்சி காணொளி
- சொத்துக்காக தாயின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்
- கார் இல்லாமல் வாழலாம் : நீரும், சோறும் இல்லாமல் வாழ முடியாது – சீமான் (காணொளி)
- இறந்துபோன பெண்ணின் உடலை சைக்கிளில் கட்டி எடுத்துச்சென்ற உறவினர்
- பேராசிரியை நிர்மலா தேவிக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு