வீட்டிலேயே சுகப்பிரசவம் பயிற்சி : விளம்பரம் செய்த ஹீலர் பாஸ்கர் கைது
Share

வீட்டிலேயே இயற்கை முறையில் வீட்டிலேயே சுகப்பிரசவம் பயிற்சி அளிக்கப்படும் என விளம்பரம் செய்ததாக ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.india tamilnews baby delivery training home heeler bhaskar arrested
அண்மையில் திருப்பூா் மாவட்டத்தில் மருத்துவமனைக்கு செல்லாமல் கிருத்திகா – கார்த்திகேயன் தம்பதியினர் இயற்கை மருத்துவமுறையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில் கிருத்திகா உயிரிழந்தார்.
யூடியூப் வீடியோக்களை பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்த விவகாரத்தில் அப்பெண்ணின் உறவினா்கள் அளித்த புகாாின் அடிப்படையில் கணவா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
இந்நிலையில் கோவை மாட்டத்தில் வீட்டில் வைத்தே பிரசவம் பாா்ப்பதற்கு வருகிற 26ம் தேதி கோவை மாவட்டம், கோவை புதூா் பகுதியில் நிஷ்டை என்ற அமைப்பு விளம்பரப்படுத்தியுள்ளது.
மேலும் இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில், இனிய சுகப்பிரசவம் ஒரு வரம் மருந்து, மாத்திரைகள், ஸ்கேனிங், இரத்தப் பரிசோதனை என எதுவுமே எடுக்காமல் மருத்துவமனை செல்லாமல் வீட்டிலேயே குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து பயிற்சி வழங்கப்படும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சர்ச்சைக்குரிய விளம்பரம் குறித்து கோவை மண்டல சுகாதார துறை இணை இயக்குர் பானுமதி போலீசில் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து நிஷ்டை மைய உரிமையாளர் ஹீலர் பாஸ்கரை கோவை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது 420 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- திருமணம் ஆசையில் காதலி : நண்பர்களோடு சேர்ந்து கற்பழித்த காதலன்
- அக்காவை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்ற தம்பி : நடந்தது என்ன?
- மனைவி தற்கொலை செய்வதை வீடியோ எடுத்து வெளியிட்ட கணவன் : அதிர்ச்சி காணொளி
- சொத்துக்காக தாயின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்
- கார் இல்லாமல் வாழலாம் : நீரும், சோறும் இல்லாமல் வாழ முடியாது – சீமான் (காணொளி)
- இறந்துபோன பெண்ணின் உடலை சைக்கிளில் கட்டி எடுத்துச்சென்ற உறவினர்
- பேராசிரியை நிர்மலா தேவிக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு