ஓசி பிரியாணி கிடைக்காததால் கடை ஊழியரிடம் பாக்சிங் போட்ட தி.மு.கவினர் (காணொளி)
Share

இலவச பிரியாணிக்காக கடை ஊழியர்களை தாக்கிய யுவராஜ் பல கட்சிகளில் நிர்வாகியாக இருந்தது தெரியவந்துள்ளது.Dakshin came Baghdad shop did get briyani,india tamilnews
சென்னை விருகம்பாக்கத்தில் இலவச பிரியாணிக்காக திமுக நிர்வாகி யுவராஜ் நடத்திய குத்து சண்டைதான் தற்போது சமூக வலைத்தளங்களில் முக்கிய செய்தியாக இருக்கிறது. யுவராஜின் செயலை கிண்டலடித்து ஏராளமான மீம்ஸ்கள் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதோடு, ‘ஓசிபிரியாணிதிமுக’ என்கிற ஹேஷ்டேக் நேற்று டிவிட்டரில் ட்ரெண்டிங் ஆனது.
யுவராஜ் விருகம்பாக்கம் திமுக தொண்டரணி பகுதி நிர்வாகியாக இருக்கிறர். இந்த விவகாரம் பூதாகரம் ஆனதால், அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக திமுக தரப்பு அறிவித்துள்ளது.
மேலும் , வடபழனி பகுதியில் வசித்து வந்த யுவராஜ், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் போதே உள்ளூர் ரவுடிகளுன் சகவாசம். சில காலங்கள் உடல் பயிற்சி மையம் ஒன்றையும அவர் நடத்தி வந்துள்ளார்.
ஜிம்மில் பயிற்சி பெரும் ரவுடிகளுடன் சேர்ந்து கொண்டு அவ்வப்போது பலருடன் தகராறில் ஈடுபடுவது, கட்டப்பஞ்சாயத்து செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். தொடக்கத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உறுப்பினராக இருந்துள்ளார்.
அதன் பின் கோடம்பாக்கம் ஸ்ரீ என்கிற ரவுடியுடன் ஏற்பட்ட தொடர்பில் அவருக்கு நெருக்கமானார்.
கோடம்பாக்கம் ஸ்ரீ நடத்தி வரும் தமிழ்நாடு இந்து மகாசபா என்ற அமைப்பில் சில வருடங்கள் இருந்துள்ளார் பிரியாணி யுவராஜ். ரவுடி ஸ்ரீ ஜீ.கே. வாசனுக்கு நெருக்கமான போது, யுவராஜ் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
ஆனால், போலீசார் ரவுடி ஸ்ரீயை நெருக்கிய போது, அவருடன் இருந்தால் இனி வேலைக்கு ஆகாது என கணக்குப்போட்ட யுவராஜ் 2016ம் ஆண்டு தேர்தலின் போது திமுகவில் சேர்ந்துள்ளார். அதன் பின் கட்டப்பாஞ்சாயத்து செய்வதையே தன் தொழிலாக கொண்டு சுற்றி வந்துள்ளார். எப்போதும், எடுபிடிகளுடன் நான்கைந்து வாகனங்களில் சென்று யுவராஜ் கெத்து காட்டுவார் என செய்திகள் வெளியாகியுள்ளது.
காணொளி :
இலவசமாக பிரியாணி தாருங்கள்…
திமுக தொண்டர்கள் என கூறிக்கொண்டு சண்டைபோடும் நபர்கள்… உண்மை என்ன? pic.twitter.com/1Yfo4GzaKc
— News18 Tamil Nadu (@News18TamilNadu) August 1, 2018
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- பிக்பாஸ் ஐஸ்வர்யா ஆபாச காட்சியில் நடித்த காணொளி
- ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை : தாய் தவிப்பு
- தற்கொலை செய்த பெண்ணை தடுக்காமல் வீடியோ எடுத்து வெளியிட்ட வீட்டார்
- கருணாநிதியை நேரில் சென்று நலம் விசாரித்தார் : நடிகர் அஜித்குமார்
- உயிருக்கு உலை வைக்கும் கிகி சேலஞ்ச் : இப்போது இந்தியாவில் ட்ரெண்ட்
- புதிய கள்ளக்காதல் சரிவராததால் பழைய கள்ளக்காதலனுடன் இணைந்து கொலை – அரசு ஊழியர் பெண்