இ.க.க மூத்த தலைவர் தா.பாண்டியனை நேரில் நலம் விசாரித்த ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ்
Share

மூச்சுத்திணறல் காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியனை தமிழக முதல்வர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.india tamilnews EPS – OPS inquired senior leader t.pandian
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன், கடந்த ஜூலை 28-ம் தேதி தனது வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் போது திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இரண்டு நாள்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு, தற்போது நல்ல உடல்நலத்துடன் உள்ளார்.
இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தா. பாண்டியனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
அப்போது முதல்வர், தா.பாண்டியன் விரைவில் குணமடைய வேண்டும் எனக் கூறி அவருக்கு மலர்ச்செண்டு அளித்தார்.
இதற்கு முன்னதாக, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தி.மு.க தலைவர் கருணாநிதியை முதல்வர் எடப்படி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், சி.வி சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- கருணாநிதியின் உடல்நிலையை நேரில் சென்று விசாரித்த சத்குரு ஜக்கி வாசுதேவ்
- தோட்டப்பகுதிகளில் புகுந்து 9 உயிர்களை கொடூரமாக கொன்ற காட்டு யானை
- அசைவின்றி படுத்திருக்கிறார்… அதிர்ச்சி தாங்க முடியவில்லை… – நாஞ்சில் சம்பத்
- வட்டி தராததால் மனைவியை தூக்கிச் சென்ற வட்டிக்காரன் : ரோட்டில் தீக்குளித்த கணவன்
- எமனோடு போராடுகிறார் – எமனையும் ஜெயித்து மீண்டு வருவார் கலைஞர் – வைகோ (காணொளி)
- கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்த முதல்வர், துணை முதல்வர் (காணொளி)
- கள்ள காதலுக்கு துணைபோன நண்பனுக்கு நேர்ந்த சோகம்
- காதலி வீட்டுமுன் காதலன் தலை : வெட்டி வீசிய ஒருதலைக் காதலன்
- ஆதார் ரகசியமானது என சவால்விட்ட டிராய் தலைவர் : ஒட்டுமொத்த தகவல்களையும் வெளியிட்ட ஹேக்கர்
- கருணாநிதி நலமுடன் உள்ளார் : கருணாநிதியை நேரில் பார்த்த வெங்கையா நாயுடு
- படுக்கைக்கு அழைத்த எதிர்வீட்டு காமுகன் : கட்டையால் அடித்து கொலை செய்த பெண்
- 4 வயது சிறுமியை கற்பழித்த இளைஞர் : பெற்றோர் இளைஞரை நடுரோட்டில் பெட்ரோல் ஊத்தி எரிப்பு
- காவல்நிலையத்தில் நிர்வாணமாக்கி துன்புறுத்தினர் : அதிகாரிகள் மீது நடிகை கண்ணீர் புகார் (காணொளி)
- கள்ளக் காதல் உடலவுறவு : மனைவியை கத்தியால் வெட்டிய வீசிய கணவர்