கருணாநிதி உடல்நிலை குறித்து விமர்சித்தால் நடவடிக்கை : தொண்டர்களுக்கு சீமான் எச்சரிக்கை
Share

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து எதிர்மறை கருத்துக்களையும், விமர்சனங்களையும் பதிவிடுவோர் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவர் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.india tamilnews action karunanidhi’s health seeman warning volunteers
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :
தமிழகத்தின் முதுபெரும் அரசியல் ஆளுமையும் திமுக தலைவருமான ஐயா மு.கருணாநிதி அவர்களின் உடல்நலம் குறித்து எதிர்மறையான செய்திகளை சமூக வலைத்தளங்களில் நாம் தமிழர் கட்சியினரின் பெயரில் இயங்கும் சிலர் பதிவிட்டு வருகிறார்கள் என்கிற செய்தியறிந்து மிகுந்த வருத்தமும், ஆழ்ந்த மனக்கவலையும் அடைந்தேன்.
ஐயா மு.கருணாநிதி அவர்களின் அரசியல் முடிவுகளோடும், திமுகவின் கொள்கை கோட்பாடுகளோடும் நமக்கு முரண்பாடுகளும், மாற்றுக்கருத்துகளும் இருக்கிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
அதற்காகவே அவர்களை அரசியல்ரீதியாக ஜனநாயக வழிமுறையில் நாம் எதிர்த்தோம். அரசியல் களத்தில் சமரசமின்றி திமுகவின் அரசியல் நடவடிக்கைகளை விமர்சித்தோம்.
தற்போது ஐயா மு.கருணாநிதி அவர்களின் உடல் நலிவுற்ற இப்பொழுதில் அவரது உடல் நலனை முன்வைத்து விமர்சிப்பதையும், அதனை குறித்தும் எதிர்மறை கருத்துகள் தெரிவிப்பதையும் ஒருபோதும் ஏற்க முடியாது.
அது அறமோ, அரசியல் பண்பாடோ அல்ல.. ஒருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிற சூழலில் அதனை தவறாக பேசியும் விமர்சனப் பதிவுகள் இட்டு பகிர்வதும் மிகவும் தவறான போக்குகளாகும்.
நம் தாய் நிலமான ஈழத்தில் நம் இனத்தைக் கண்முன்னே சாகக் கொடுத்தவர்கள் நாம். இழப்பின் துயரை அணுஅணுவாக அறிந்தவர்கள் நாம் வயோதிகத்தின் காரணமாய் நோயுற்று இருக்கும் முதுபெரும் தலைவரைப் பற்றி எதிர்மறை பதிவுகள் இட்டு இன்புறுவது என்பது நாம் பயிற்றுவிக்கும் அரசியலுக்கே எதிரானது.
நாம் உருவாக்க முயலும் பண்பாட்டு அரசியல் விழுமியங்களுக்கு முரணானது.
மாற்று எதிர் கருத்து கொண்டோரையும் மதிப்போடு விளித்த வே.பிரபாகரன் அவர்களைத் தலைவராக ஏற்று அரசியல் மாண்பைக் கடைப்பிடிக்கிற நாம் எந்த வகையிலும் பிறர் மனம் வருந்தும் தனிப்பட்ட தாக்குதல்கள் உடைய பதிவுகளை இடுவதோ, பரப்புவதோ கூடாது.
அவ்வாறு பதிவுகள் இடுவது நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானது. அவ்வாறு பதிவிடுபவர்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவர்.
திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்களின் உடல்நிலை தேறி மீண்டும் அவர் அரசியல் தளத்திலே பணியாற்ற வேண்டும் என்கிற எனது விருப்பத்தினை தெரிவித்துக் கொள்ளும் இவ்வேளையில், இணையத்தில் இயங்கும் நம் உறவுகள் இதுகுறித்து மிகுந்த கவனம் கொண்டு கண்ணியத்தோடும்,அரசியல் நாகரீக மாண்புகளோடும் செயல்படும் படி வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டிய மாணவிகள் மீது காவல்துறை கொடூர தாக்குதல் (காணொளி)
- ஆப்பிரிக்காவின் கிளிமஞ்சாரோ மலை உச்சியை தொட்டு 17வயது இந்திய மாணவி சாதனை
- சொத்துக்காக கணவனை கடத்தி மிரட்டிய மனைவி…
- என் அறைக்கு வர ஆசையா வாராகி..? வா வந்து என் மலம் சாப்பிட்டு போ… – ஸ்ரீ ரெட்டி
- சற்றுமுன் கருணாநிதி உடல் நிலை கவலைக்கிடம் : மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் (காணொளி)
- சற்றுமுன் புகார் கொடுக்க ஆரம்பித்த ஸ்ரீ ரெட்டி : பிரபல இயக்குனர் மீது முதல் புகார் (காணொளி)
- ஜெயலலிதா கர்ப்பமாக இல்லை : வீடியோவுடன் நிரூபித்த தமிழக அரசு (காணொளி)
- கருணாநிதி விரைவில் உங்களை சந்திப்பார் – மு.க.ஸ்டாலின் டிவிட்
- கள்ளக் காதல் உடலவுறவு : மனைவியை கத்தியால் வெட்டிய வீசிய கணவர்