கள்ள உறவுக்கு இடையூறாக இருந்த மகன் : தோழியுடன் சேர்ந்து கொலை செய்த தாய்
Share

தகாத உறவுக்கு இடையூறாக இருந்த மகனைத் தாயே,தோழியுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.son hampered illicit relationship mother murdered friend india tamilnews
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டையை அடுத்த சோழங்கபுரத்தை சேர்ந்தவர் மீனாம்பாள். கணவர் இறந்த நிலையில்,13 வயது மகன் அங்குராஜூடன் வாழ்ந்து வந்துள்ளார்.
கூலி தொழில் செய்து வந்த மீனாம்பாளுக்கு, கொத்தனார் முத்தழகு என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
மீனாம்பாளின் தோழியான லட்சுமியும்,முத்தழகுடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மகன் அங்குராஜிற்கு தெரிய வரவே,தமது உறவினர்களிடம் சம்பவத்தை கூறி அழுதுள்ளான்.
தம்மை அவமானப்படுத்திய மகனை பழிவாங்க எண்ணிய தாய் மீனாம்பாள்,அங்குராஜிற்கு தூக்க மாத்திரை கொடுத்து,தோழி லட்சுமியின் உதவியுடன்,கழுத்தை நெறித்து கொன்றுள்ளார்.
மகன் மயங்கிவிழுந்து உயிரிழந்துவிட்டதாக கதறி அழுது நாடகத்தை அரங்கேற்றிய நிலையில், காவல்துறையின் விசாரணையில் இந்த அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.
சம்பவம் தொடர்பாக தாய் மீனாம்பாள்,தோழி லட்சுமியை கைது செய்த காவல்துறையினர், முத்தழகனை தேடி வருகின்றனர்.
கள்ளக்காதலுக்காக, பெற்ற மகனை தோழியுடன் சேர்ந்து கொன்ற தாயின் செயல்,அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- 10 வயதுக்கு உட்பட்ட மூன்று பெண் குழந்தைகள் பசியால் உயிரிழந்த சோகம்…
- தொழிலதிபரை மிரட்டி பணம் மோசடி செய்த சின்னத்திரை நடிகை கைது…
- அப்துல்கலாம் வார்த்தைகளை பின்பற்றி புதுச்சேரி மாணவி சாதனை…
- திருடிய போலீஸ் மனைவி… கடையில் புகுந்து கணவர் அடிதடி…
- கர்ப்பிணி பெண்களுக்கு வயகரா மாத்திரை டெஸ்டிங்… – காரணம் என்ன..?
- ஆசைக்கு இணங்காத மருமகளை வெட்டித்தள்ளி… மாமனார் தற்கொலை…
- கற்பழித்த 17 பேரை அடையாளம் காட்டிய அயனாவரம் சிறுமி : தூக்கா? ஆயுளா?
- கமலஹாசன் அப்படிபட்டவர் இல்லை… – ஸ்ரீபிரியா பேச்சு…
- மாணவர்களிடம் லட்ச கணக்கில் டெபாசிட் கேட்ட தனியார் பள்ளி தாளாளர் கைது…
- மாணவிகளை ஆசைக்கு அழைத்த விடுதி உரிமையாளர் மர்ம மரணம்… கிணற்றில் சடலமாக மீட்பு…
- இட ஒதுக்கீடு கோரி நடத்திய போராட்டத்தில் வன்முறை…
- தி.நகர் சென்னை சில்க்ஸ் புதிய கட்டிடத்திற்கு தடை…
- லாக்-அப் மரண வழக்கில் 2 போலீஸாருக்கு தூக்கு – 13 ஆண்டுக்கு பின் தாய்க்கு கிடைத்த நீதி
- நிலத்தை அழிக்கும் அரசாங்கமே “கடைக்குட்டி சிங்கம்” திரைப்படம் பாருங்கள் – நடிகர் சத்யராஜ்
- யூடியூப் வீடியோ பார்த்து வீட்டில் பிரசவம் – கர்ப்பிணிப் பெண்ணுக்கு நடந்த சோகம்