ஓபிஎஸ் பதவி விலக வேண்டுமா..? நிருபர் கேள்விக்கு கமல்ஹாசனின் அதிரடி பதில்…
Share

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதவி விலக வேண்டும் என்று தமிழகம் வழிமொழிவதில் எனக்கு சந்தோஷம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.(Should Ops resign? Kamal Haasan’s response to the reporter’s question)
சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் இன்று மாலை 4.45 மணியளவில் நிருபர்களை சந்தித்துள்ளார். நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க செல்லும் முன்பாக கமல்ஹாசன், செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
காவிரி ஆணையம் காவிரியில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதையும் நாங்கள் தமிழக பங்கு தண்ணீராக கணக்கில் வைப்போம் என கர்நாடக அரசு கூறியுள்ளதே. இது குறித்து உங்கள் பார்வை? என்ற நிருபரின் கேள்விக்கு, நான் கர்நாடகா போனது, குறுவை சாகுபடிக்கு தண்ணீர் பிச்சை கேட்கதான். விவசாயிகளுக்கு தேவை இருந்துள்ளது.
அதற்காக வெட்கம் பார்க்காமல் போனேன். இதை, நான் காவிரி ஆணையமே தேவை இல்லை என்று கூறியதாக அரசியலில் திரித்துவிட்டனர். காவிரி ஆணையம் தேவை. வறட்சி காலங்களில் நீர் இருப்பை பங்கீட நீர் ஆணையம் அவசியம். ஓ.பன்னீர் செல்வம் பதவி விலக கோரிக்கை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் எழுந்துள்ளதே என்ற நிருபர்களின் கேள்விக்கு, இதை தமிழகம் வழிமொழிவது சந்தோஷம். இதை நான் சொல்லி ஒரு வருஷம் ஆகிவிட்டது.
பல ட்வீட்டுகள் போட்டதும் இதற்குதான். இதுபோன்ற நிலவரம் கூடி வருவதுதான் நான் அரசியலுக்கு வர முக்கிய காரணம் என்றார் கமல்ஹாசன். எம்ஜியாருக்கே தனியார் விமானம்தான் ஓபிஎஸ் பதவி விலக வேண்டுமா என்ற நிருபரின் கேள்விக்கு, இந்த அரசு பதவி விலக வேண்டும் என்று நான் கூறி பல வருடங்கள் ஆகிவிட்டது என்றார் கமல். ஓபிஎஸ் தம்பிக்கு ராணுவ ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டது பற்றிய கேள்விக்கு, “அரசியல் மாண்பு சீரழிந்து வருவதாக நினைக்கிறேன் என்று , தெரிவித்துள்ளார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- கமலஹாசன் அப்படிபட்டவர் இல்லை… – ஸ்ரீபிரியா பேச்சு…
- மாணவர்களிடம் லட்ச கணக்கில் டெபாசிட் கேட்ட தனியார் பள்ளி தாளாளர் கைது…
- மாணவிகளை ஆசைக்கு அழைத்த விடுதி உரிமையாளர் மர்ம மரணம்… கிணற்றில் சடலமாக மீட்பு…
- இட ஒதுக்கீடு கோரி நடத்திய போராட்டத்தில் வன்முறை…
- தி.நகர் சென்னை சில்க்ஸ் புதிய கட்டிடத்திற்கு தடை…
- லாக்-அப் மரண வழக்கில் 2 போலீஸாருக்கு தூக்கு – 13 ஆண்டுக்கு பின் தாய்க்கு கிடைத்த நீதி
- நிலத்தை அழிக்கும் அரசாங்கமே “கடைக்குட்டி சிங்கம்” திரைப்படம் பாருங்கள் – நடிகர் சத்யராஜ்
- யூடியூப் வீடியோ பார்த்து வீட்டில் பிரசவம் – கர்ப்பிணிப் பெண்ணுக்கு நடந்த சோகம்
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :