திருடிய போலீஸ் மனைவி… கடையில் புகுந்து கணவர் அடிதடி…
Share

சென்னை எழும்பூரில் அமைந்துள்ள நீல்கிரீஸ் என்ற சூப்பர் மார்க்கெட்டிற்கு, பொருட்களை வாங்குவது போல பெண் காவலர் ஒருவர் சென்றுள்ளார்.chennai lady police husband bought super market india tamil news
உள்ளே நுழைந்தது முதல் நீண்ட நேரமாக செல்போன் பேசிக் கொண்டே வலம் வந்த அவர் மீது ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஊழியர்கள் காவலரை கண்காணிக்க தொடங்கினர். அப்போது செல்போனில் பேசியபடியே பாவனை காட்டிய அவர், திடீரென சாக்லெட்டுகளை எடுத்து சட்டை பைக்குள் ஒளித்து வைப்பதை ஊழியர் ஒருவர், பார்த்து கடை உரிமையாளர் பிரனாவிடம் கூறியிருக்கிறார்.
நீண்ட நேரத்திற்கு பிறகு பில் போடும் இடத்திற்கு வந்த காவலர், கையில் கொண்டு வந்த 2 பொருட்களுக்கு மட்டும் பில் போடும்படி கூறியுள்ளார்.
அப்போது, அங்கிருந்த கடை உரிமையாளர் பிரனாவ், பாக்கெட்டில் இருப்பதையும் எடுத்து பில் போடுங்கள் என அறிவுறுத்தியிருக்கிறார்.
ஆனால் பாக்கெட்டில் பொருட்கள் இல்லையென காவலர் சாதிக்கவே, பெண் ஊழியர் ஒருவர் அவரை சோதனை செய்தார்.
அப்போது, 5 ஸ்டார் சாக்லெட், ஜெம்ஸ் சாக்லெட், பார் ஒன் சாக்லெட், ஓடோமஸ் போன்றவற்றை பெண் காவலர் திருடி ஒளித்தை வைத்திருப்பது தெரியவந்தது.
அதன் பிறகும் தாம் திருடவில்லை என சாதிக்கவே, அவரிடம் சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை காண்பித்தபோது மௌனமாகி, திருடியதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து அவரிடம் எழுதி வாங்கிவிட்டு, எச்சரித்து அனுப்பியிருக்கிறார் கடை உரிமையாளர் பிரனாவ்.
காவலர் கடையில் இருந்து புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்திலேயே, அவருடைய கணவர் தனது 2 நண்பர்களுடன் கடைக்குள் புகுந்தார்.
கடையில் வேலை செய்யும் பெண் ஊழியர்களை ஆபாசமாக திட்டி மிரட்டிய 3 பேர் கொண்ட அந்த கும்பல், கடை உரிமையாளர் பிரனாவையும் கடுமையாக தாக்கிவிட்டு சென்றது.
இதுகுறித்து சிசிடிவி ஆதாரங்களுடன் கடை உரிமையாளர் அளித்த புகாரின்பேரில், எழும்பூர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், சூப்பர்மார்க்கெட்டில் திருடியவர், கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் நந்தினி என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து காவலரின் கணவர் கணேஷை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- கர்ப்பிணி பெண்களுக்கு வயகரா மாத்திரை டெஸ்டிங்… – காரணம் என்ன..?
- ஆசைக்கு இணங்காத மருமகளை வெட்டித்தள்ளி… மாமனார் தற்கொலை…
- கற்பழித்த 17 பேரை அடையாளம் காட்டிய அயனாவரம் சிறுமி : தூக்கா? ஆயுளா?
- கமலஹாசன் அப்படிபட்டவர் இல்லை… – ஸ்ரீபிரியா பேச்சு…
- மாணவர்களிடம் லட்ச கணக்கில் டெபாசிட் கேட்ட தனியார் பள்ளி தாளாளர் கைது…
- மாணவிகளை ஆசைக்கு அழைத்த விடுதி உரிமையாளர் மர்ம மரணம்… கிணற்றில் சடலமாக மீட்பு…
- இட ஒதுக்கீடு கோரி நடத்திய போராட்டத்தில் வன்முறை…
- தி.நகர் சென்னை சில்க்ஸ் புதிய கட்டிடத்திற்கு தடை…
- லாக்-அப் மரண வழக்கில் 2 போலீஸாருக்கு தூக்கு – 13 ஆண்டுக்கு பின் தாய்க்கு கிடைத்த நீதி
- நிலத்தை அழிக்கும் அரசாங்கமே “கடைக்குட்டி சிங்கம்” திரைப்படம் பாருங்கள் – நடிகர் சத்யராஜ்
- யூடியூப் வீடியோ பார்த்து வீட்டில் பிரசவம் – கர்ப்பிணிப் பெண்ணுக்கு நடந்த சோகம்