8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயி குடும்பம்! – அடித்து தூக்கி சென்ற காவல்துறையினர்!
Share

சென்னை – சேலம் பசுமை வழிச்சாலைக்காக நிலம் கையகபடுத்தும் பணி கடந்த இரண்டு மாதமாக செங்கம் தாலுகாவில் உள்ள பல்வேறு கிராமங்களில் விவசாயிகளின் எதிர்ப்புகளையும் மீறி நடந்து வருகிறது.farmer family protesting 8th – beaten police
திங்களன்று (ஜூலை 23) செங்கம் அடுத்த அத்திப்பாடி கிராமத்தில் அருள் என்பவரது நிலத்தில் பசுமைவழிச் சாலைக்காக நிலம் கையகபடுத்தும் பணிக்காக வருவாய்துறையினர் மற்றும் சுமார் 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டனர்.
பயிருக்காக போடப்பட்டிருந்த வேலிகளை விவசாயிகளுக்கு தெரியாமல் உடைத்து எரிந்து விட்டு உள்ளே நுழைந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர், நிலம் அளக்கும் பணியில் ஈடுபடடனர். அதனை கண்ட விவசாயிகள் அருள், சவுந்தர் மற்றும் அவரது தாயார் அலமேலு ஆகியோர் நிலம் அளவிடும் நபர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனார்.
அப்போது அங்கிருந்த காவல்துறையினர் அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விவசாயி அருள் மற்றும் சவுந்தரை காவலர்கள் தாக்க முயன்றனர். அதில் பயந்து ஓட முயற்சித்த விவசாயி அருளை மடக்கி பிடித்து, காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கிச் சென்றனர். அவரது தாயார்பின்னாலே கதறிய படி சென்றார்.
அப்போது அலமேலுவை காவலர் தள்ளியதில், அவர் மயங்கி விழுந்தார். அவர் மயங்கி விழுந்ததை, காவல்துறையினர் கண்டு கொள்ளாமல், அவருக்கு முதலுதவி கூட கொடுக்காமல், அவரையும் போலீசார் இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக அவரது மகன் குற்றம் சாட்டியுள்ளார்.
விவசாயி சவுந்தரை போலீசார் அடித்ததில் அவர் காதுவலியால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார்.
எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி வேலியை உடைத்து அத்துமீறி நிலத்திற்குள்ளே நுழைந்த காவல்துறையினர் பசுமைவழிச் சாலைக்காக விவசாயிகளை அடித்து துன்புறுத்தி நிலம் அளவிடும் பணியினை செய்துள்ளதை அப்பகுதி விவசாயிகள் வண்மையாக கண்டித்துள்ளனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- சினிமா ஆசை காட்டி பெண்களை சீரழித்த போலி இயக்குனருக்கு அடி-உதை..!
- காவிரி தண்ணீர் வந்தாச்சு! – அய்யாக்கண்ணுவை விவசாயம் செய்யக்கோரி மனு!
- நான் ஏன்..? ஸ்ரீ ரெட்டி விஷயத்தை பேச வேண்டும்..? – பொங்கியெழுந்த லட்சுமி ராமகிருஷ்ணன்!
- ஸ்ரீ ரெட்டி மீது விபச்சார வழக்கு! – கமிஷனர் அலுவலகத்தில் இயக்குனர் புகார்!
- 40 சிறுமிகள் பலாத்காரம்! : தட்டி கேட்ட பெண்ணை கொன்று புதைத்த கொடூரம்..!
- கோவையில் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய பெண் வார்டன்!
- 10 ரூபாயை தொலைத்த குழந்தை! – கொலை வெறித்தாக்குதல் நடத்திய தந்தை!
- ரஜினிகாந்த் இனிமேலும் கட்சி துவங்குவார் என நம்புறீங்களா? – தேமுதிக சுதீஷ்!
- ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும்..? – ஸ்ரீ ரெட்டியை கிழித்த பாரதிராஜா!
- “வன்முறை” – “ஈவ் டீசிங்” ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பாயும்..! – ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கை..!
- இந்தியாவில் நல்லாட்சி நடத்துவதில் தமிழகம் 2-வது இடம்! – பொது விவகார மையம்!
- கேரளாவில் மீண்டும் தமிழர்கள் மீது தாக்குதல்! – லாரி கிளீனர் பலி!
- 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் திடீர் திருப்பம்..!
- 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முழுமையாக நிரம்பிய மேட்டூர் அணை!
- இவர் ஜக்கியா? – ஜாக்சனா? – நடிகருடன் ஆட்டம்போடும் சாமியார் ஜக்கி! (காணொளி)
- கருகலைத்து கையில் கருவுடன் புகார் அளிக்க சென்ற இளம் பெண்..! – அதிர்ச்சியில் போலீஸார்!