எங்களைக் கொல்வதால் என்ன லாபம்? – காதல் ஜோடியின் உருக்கம்..!
Share

காதல் எந்த எல்லைகளிலும் அடங்காத ஒப்பற்ற உணர்வு. இதைத்தான் காலங்காலமாக உணர்த்திக் கொண்டிருக்கிறது, காதல் அதன் அழகிய வடிவிலேயே.profit killing us? – romantic couple
ஆனால், சாதிகளாலும், மதங்களாலும் பிரிந்து கிடக்கும் இந்திய சமூகத்தில் காதல் சுதந்திரமான ஒன்றாக இருப்பதில்லை.
காதலிப்பவர்களை, தடைகளைக் கடந்து மணமுடிந்தவர்களை இந்த சமூகத்தின் கறை நிறைந்த பக்கங்கள் சும்மா விடுவதில்லை.
கேரள மாநிலத்தில் சாதி மாறி திருமணம் செய்துகொண்ட கெவின் என்ற இளைஞர், பெண்ணின் பெற்றோர்களால் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கெவின் படுகொலை ஏற்படுத்திய தாக்கம் குறையாத நிலையில், சில தினங்களுக்கு முன்னர் மதங்களைக் கடந்து திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி கொலை மிரட்டல்களைச் சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹாரிஸன் எனும் கிறித்தவ இளைஞரும், சஹானா எனும் இஸ்லாமிய இளம்பெண்ணும் நீண்டகாலமாக காதலித்து வந்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்ட இவர்கள், முகநூல் பக்கத்தில் மணக்கோலத்தில் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளனர்.
இதையடுத்து, சில அடிப்படைவாத அமைப்புகள் இந்த ஜோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறது. இதனால், அச்சமடைந்த இவர்கள் செய்வதறியாமல் முகநூலில் தங்களது கவலையை முகநூல் பக்கத்தில் வீடியோ காட்சியாக பதிவிட்டுள்ளனர்.
உருக்கமான அந்த வீடியோ காட்சியில், நாங்கள் சாவதற்காக காதலித்து திருமணம் செய்யவில்லை. எஸ்.டி.பி.ஐ. போன்ற அமைப்புகள் எங்களை மிரட்டுகின்றன. நாங்கள் சேர்ந்து வாழவே விரும்புகிறோம்.
மதம் மாறும் எண்ணம் எங்கள் இருவருக்கும் கிடையாது. இருவரும் வற்புறுத்தவும் இல்லை. அப்படி இருக்கையில், எங்களைக் கொல்லப்போவதாக மிரட்டுவது எந்தவிதத்தில் நியாயம்.
எல்லாவற்றையும் கடந்து காதலித்து திருமணம் செய்துகொண்ட எங்களைக் கொல்வதால் உங்களுக்கு என்ன லாபம்? என கேள்வியெழுப்பியுள்ளனர்.
வீடியோவின் முடிவில் ஹாரிஸன், எங்கள் காதலை நிலைத்திருக்கச் செய்ய நாங்கள் வாழவே ஆசைப்படுகிறோம். கெவினைப் போல சாக எங்களுக்கு விருப்பமில்லை என குறிப்பிடுகிறார்.
அரசு இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- இன்டர்நேசனல் ஸ்கூலில் குழந்தைகளை அடித்து காலால் உதைத்த ஆசிரியர்..!(காணொளி)
- பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் பணச்செலவு ரூ 1,483 கோடி..! (விவரம்)
- பெண் ஆசிரியை பள்ளி மாணவனை வகுப்பில் கொடூரமாக அடித்த காட்சி..!
- நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த நா.த.க தலைவர் சீமான்..!
- வீட்டுப்பாடம் எழுதாததால் மாணவர்களை பனை மட்டையால் அடித்த ஆசிரியர்!
- விஜய்சேதுபதிக்கு அறிவு இல்லையா?- பசுமை தாயகம் கேள்வி!
- என் தங்கை என் காதலை ஏற்க மறுத்தால்..! – கழுத்தை அறுத்துக்கொன்றேன்..! – அண்ணன்..!
- காங்கேயம் -திருப்பூர் வழியில் நடந்த கோர விபத்து! – கண்டுகொள்ளாத பொதுமக்கள்!(காணொளி)
- “50 பேர் மீது புகார் கொடுத்தேன்..! ஒரு நடவடிகையும் இல்லை” – ஸ்ரீரெட்டி வேதனை!
- அலைபாயுதே திரைப்படம் பாணியில் வாழ்ந்த காதல் ஜோடி! – முடிவு கண்ணீர்!