அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் அடையாள அட்டை அணிய வேண்டும் -உயர்நீதிமன்றம் உத்தரவு!
Share

{ Gvmtt employees need wear Identity card }
அரசுத்துறை ஊழியர்களும் பணி நேரத்தின் போது அடையாள அட்டை அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஈரோட்டைச் சேர்ந்த வள்ள நாராயணன் என்பவர் தலைமை நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில், 1986ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் தங்கள் பெயர் பட்டையை அணிந்திருக்க வேண்டும் என்றும், இந்த உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த கடிதத்தின் அடிப்படையில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆஷா அடங்கிய அமர்வு, தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, பெயர் பட்டை அணியும் பழைய நடைமுறைக்கு பதிலாக தற்போது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதிகள், அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
Tags: Gvmtt employees need wear Identity card
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- வேகமாக ஓடும் காவிரி வெள்ளத்தில் செல்பி எடுக்க முயன்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழப்பு!
- மயக்க ஊசி போட்டு 11வயது மாற்றுத்திறனாளி சிறுமி 15 பேரால் 7 மாதமாக பலாத்காரம்!
- புதிதாக அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு; பாமக நிறுவனர் புதிதாக அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு ராமதாஸ் அறிவித்த சவால்??
- டெண்டர் விடுவதில் விஞ்ஞானப்பூர்வ ஊழல் செய்தது திமுக தான்: அமைச்சர் ஜெயக்குமார்!
- நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்: எடப்பாடி பழனிசாமி!
- நான் விவசாயி என்று சொல்லியும் விடாமல் தாக்கினார்கள்! – இஸ்லாமியர் வாக்குமூலம்!
- புற்று நோயை குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடித்த மருத்துவ ஆய்வு மாணவி!
- தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்த ஹிமா தாஸின் கண்ணீர் – இந்தியாவின் சந்தோஷம்!