டெண்டர் விடுவதில் விஞ்ஞானப்பூர்வ ஊழல் செய்தது திமுக தான்: அமைச்சர் ஜெயக்குமார்!
Share

{ DMK done scientific scam tender }
அதிமுக ஆட்சியில் விடப்பட்ட டெண்டர்களில் எந்த முறைகேடும் நிகழவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற அதிமுக எம்.பிக்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், தமிழக அரசைக் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு எடுக்கும் எந்த ஒரு முடிவுக்கும் ஆதரவளிக்கப்படாது எனத் தெரிவித்தார்.
வருமானவரித் துறை சோதனையில் அரசியல் உள்நோக்கம் இல்லை என்றும், 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.
அரசு டெண்டர்களில் பெருமளவு முறைகேடு நிகழ்ந்துள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை திட்டவட்டமாக மறுத்த ஜெயக்குமார், திமுக ஆட்சியில்தான் டெண்டர் விடுவதில் விஞ்ஞானப்பூர்வமாக முறைகேடுகள் நடைபெற்றதாக புள்ளி விபரங்களுடன் குற்றம்சாட்டினார்.
Tags: DMK done scientific scam tender
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்: எடப்பாடி பழனிசாமி!
- நான் விவசாயி என்று சொல்லியும் விடாமல் தாக்கினார்கள்! – இஸ்லாமியர் வாக்குமூலம்!
- புற்று நோயை குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடித்த மருத்துவ ஆய்வு மாணவி!
- தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்த ஹிமா தாஸின் கண்ணீர் – இந்தியாவின் சந்தோஷம்!
- “நான் மகிழ்ச்சியாக இல்லை”: மேடையில் கண்ணீர் விட்டு அழுத கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி!