Type to search

நான் விவசாயி என்று சொல்லியும் விடாமல் தாக்கினார்கள்! – இஸ்லாமியர் வாக்குமூலம்!

INDIA

நான் விவசாயி என்று சொல்லியும் விடாமல் தாக்கினார்கள்! – இஸ்லாமியர் வாக்குமூலம்!

Share

நான் விவசாயி என்று சொல்லிப்பார்த்தும் என்னை விடாமல் தாக்கினார்கள்” என்று பசுப் பாதுகாவலர்கள் என்னும் குண்டர்களால் தாக்கப்பட்ட சமையுதீன் வாக்குமூலம் அளித்துள்ளார்.farmer – muslim confession india

சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, ஜூன் 18 அன்று, உத்தரப்பிரதேச மாநிலம் ஹபூர் பிக்குவா பகுதியில் காசிம் என்பவர் பசுப்பாதுகாப்புக் குழு குண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். அதைக் கேட்பதற்காகச் சென்ற சமையுதீன் என்பவரும் அடித்து நொறுக்கப்பட்டார்.

அவரது இரு கைகளும், வலது காலும், கழுத்து அருகிலும் கடும் காயங்கள். அவர் கடந்த ஒரு மாத காலமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை முடிந்து இன்னமும் அவர் தன் சொந்த ஊருக்குச் செல்லவில்லை. செல்வதற்கு அஞ்சுகிறார்.

புதுதில்லியில் இந்தியன் சோசியல் இன்ஸ்டிட்யூட்டில் தன்னுடைய வழக்குரைஞருடன் ஓர் அறையில் அமர்ந்திருந்த 63 வயதான சமையுதீனை, தி இந்து நாளிதழின் செய்தியாளர் சந்தித்து பேட்டி கண்டிருக்கிறார்.

தி இந்து நாளிதழின் தில்லிப் பதிப்பு இன்றைய தினம் (15.7.2018) அதனை முதல் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. அதன் விவரம் வருமாறு “நான் என்னுடைய கால்நடைகளுக்குத் தீவனம் கொண்டுவருவதற்காக, என் அண்டைவீட்டுக்காரர் ஹசனுடன் பண்ணைகளுக்குச் சென்றுகொண்டிருந்தோம்.

அப்போது காசிம்மை ஒருசிலர் அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களிடம் சென்று “ஏன் அவரை அடிக்கிறீர்கள்?” என்று கேட்டோம். அப்போது அவர்கள் எனக்கு எதிராகத் திரும்பி விட்டார்கள். ஹசன் ஓடிவிட்டார். சுமார் 30இலிருந்து 40 பேர் வரை அந்தக் கும்பலில் இருந்தார்கள். அவர்கள் என்னையும், காசிம்மையும் ஒரு கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்றார்கள்.

அவ்வாறு இழுத்துச் சென்று கொண்டிருக்கும்போதே, எங்களைக் கம்புகளாலும், இரும்புக் கம்பிகளாலும், வழியில் தங்கள் கைகளில் எது கிடைக்கிறதோ அதனைக் கைகளில் எடுத்தும் எங்களை அடித்து இழுத்துச் சென்றார்கள். எங்களுக்கு நினைவு மங்கிக்கொண்டே வந்தது. எங்களை பஜேரா குர்டில் ஒரு கோவிலருகே கிடத்தினார்கள். நாங்கள் பசுவைக் கொல்கிறவர்கள் என்று அவர்கள் கத்திக்கொண்டே இருந்தார்கள்.

நான் அவர்களிடம், “நான் ஒரு விவசாயி,” என்றேன். ஆனால் அவர்கள் அதைக் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. அந்த சமயத்தில் அங்கே வயலில் பசுக்கள் எதுவும் இல்லை. காசிம்மை அவர்கள் பிடித்தபோது அவர் பண்ணையில் நடந்துகொண்டிருந்தார்.

போலீசார் என்னிடம் என்னுடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்யவே இல்லை. நான் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் (ஐசியு-வில்) இருந்தபோது, அவர்கள் வந்தார்கள். பின்னர் நான் வார்டுக்கு மாற்றப்பட்டபின்னர் அவர்கள் என்னிடம் வாக்குமூலம் வாங்குவதற்காக வரவே இல்லை.

எனினும் ஹபூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சங்கல்ப் ஷர்மா, அவருடைய வாக்குமூலங்களை இரண்டு தடவை பதிவு செய்திருப்பதாகவும், முதலில் ஜூன் 19 அன்று என்றும், அடுத்ததாக “சமீபத்தில்” என்றும் கூறியிருக்கிறார்.

சமையூதீனின் வழக்குரைஞரான திருமதி விருந்தா குரோவர், பாதிக்கப்பட்டவர், அவருடைய சகோதரர் யாசீன் மற்றும் ஹண்டல்பூர் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் தோமார் என்பவர்களிடம் எழுத்துபூர்வமாக வாக்குமூலங்களைப் பெற்று, இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நியாயமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தி மீரட், இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு அனுப்பி இருப்பதாகக் கூறினார்.

போலீசாரின் பங்கு:

சமையுதீன் சகோதரரான யாசீம் கூறுகையில், போலீசார், தோமாரிடம், ஒரு மோட்டார் சைக்கிளால் மோதப்பட்டபோது, சத்தம் போட்டார்கள் என்பதற்காக ஒருசிலர் காசிம்மையும், சமையூதினையும் அடித்ததாக ஒரு புகார் எழுதிக்கொடுக்கமாறு கேட்டுக்கொண்டார்கள் என்றும், பின்னர் போலீசார் எழுதியிருந்த வாக்குமூலத்தில் என்னைக் கையெழுத்து இடும்படி நிர்ப்பந்தித்தார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

“அங்கே எவ்விதமான மோட்டார் சைக்கிளும் கிடையாது. உண்மையில், சம்பவம் நடந்த இடத்தில் சாலையே கிடையாது,” என்று சமையுதீன் கூறினார். தன்னை அடித்தவர்களில் குறைந்தது ஐவரையாவது என்னால் அடையாளம் காட்டமுடியும் என்று சமையுதீன் கூறினார்.

காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், “11 பேருக்கு எதிராக பிடி வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன. இதில் அவர் குறிப்பிட்டவர்களும் அடங்குவார்கள். நான்கு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஒருவர் பிணையில் விடப்பட்டிருக்கிறார்,” என்றார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags: