வாட்ஸ் ஆப் வதந்தி: ஊர்மக்களால் அடித்துக்கொள்ளப்பட்ட பொறியியலாளர்!
Share

{ Watts rumor engineer hit rumors }
கர்நாடகாவில், குழந்தையைக் கடத்த முயன்றதாக வாட்ஸ்ஆப்பில் பரவிய வதந்தியால், தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ஒருவர் கிராம மக்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.
ஹைதராபாத்தில் தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர்களாக பணியாற்றி வந்த முகமது ஆசம் (Mohammad Azam), பஷீர், சல்மான் மற்றும் அக்ரம் ஆகிய நால்வரும் விடுமுறைக்காக கர்நாடகாவுக்கு காரில் சென்றுள்ளனர்.
அப்போது முர்கி (Murki) என்ற கிராமத்தின் அருகே நின்று கொண்டிருந்த குழந்தைகளுக்கு சாக்லேட்டுகளை வழங்கி உள்ளனர். இதைப் பார்த்த கிராமவாசி ஒருவர், குழந்தைகளைச் சிலர் கடத்த முயல்வதாக வாட்ஸ் ஆப் குரூப்பில் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து கூட்டமாக திரண்டு வந்த கிராமத்தினர், அந்த நான்கு இளைஞர்களையும் சுற்றிவளைத்து அடித்து உதைத்தனர்.
காரில் ஏரி நான்கு பேரும் தப்ப முயன்ற போது, கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் கவிழ்ந்தது. அப்போதும் விடாமல், காருக்குள் சிக்கிய நான்குபேரையும் வெளியில் இழுத்து, அடித்து உதைத்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில், முகமது ஆசம் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். மற்ற மூன்றுபேரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், வதந்தி பரப்பிய வாட்ஸ் ஆப் அட்மின் உட்பட 32 பேரை கைது செய்தனர்.
Tags: Watts rumor engineer hit rumors
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- பல நடிகர்களின் முகத்திரையை கிழிக்கும் ஸ்ரீரெட்டி, அஜித்தை பற்றி கூறிய விடயம்!
- 12 ஆண்டுகளுக்குப் பின் 88 அடியை எட்டுகிறது பவானிசாகர் அணை!
- பட்டதாரி பெண் எரித்து கொலை: வாட்ஸ் ஆப் காதலனின் வெறிச்செயல் ( முழு விபரம் )!
- விஜய் மல்லையாவைப் போல் வங்கிகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள்: ஜுவல் ஓரம் சர்ச்சை பேச்சு!
- முஸ்லீம் ஆண்களுக்கு மட்டும்தான் காங்கிரஸ் கட்சி இருக்கின்றதா ? – பிரதமர் நரேந்திர மோடி கேள்வி
- புற்று நோயை குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடித்த மருத்துவ ஆய்வு மாணவி!
- கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொன்று இளைஞர் தூக்கிட்டு தற்கொலை: ஒருதலைக் காதலால் விபரீதம்!
- அதிமுக ஆட்சியை கலைக்கவே எதிரியும், துரோகியும் கைகோர்த்துள்ளனர்: அமைச்சர் தங்கமணி!
- கர்மவீரர் காமராஜரின் 116 வது பிறந்த நாள் – கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்!
- ஸ்ரீரெட்டியின் புகாருக்கு இயக்குநர், நடிகர்கள் பதில் அளிக்க வேண்டும் – டி.ராஜேந்தர்
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :