ரஜினியை பார்க்க ஆசைப்பட்ட சிறுவனுக்கு கிடைத்த அதிஷ்டம் !!
Share

( meet Rajini Integrity boy fulfilled)
ஈரோடு மாவட்டத்தில் சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.50 ஆயிரம் பணத்தை போலீஸிடம் ஒப்படைத்த சிறுவனுக்கு ரஜினியை நேரில் சந்திக்க வேண்டும் என்று ஆசை உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கனிராவுத்தர்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பாட்சா. இவரது மனைவி அப்ரோஜ் பேகம். இவர்களுக்கு யாசின் என்ற மகன் உள்ளார். இவர் அரசு பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது சாலையோரத்தில் ஒரு கைப்பை கிடைப்பதை கண்டுள்ளார்.
இதையடுத்து அதை திறந்து பார்த்த போது அதில் நிறைய பணம் இருந்ததை கண்டு திடுக்கிட்டார்.
யாசின் முன்னிலையில் , அந்த பையை எடுத்து சென்ற யாசின் தனது ஆசிரியரிடம் தெரிவித்தார். அவர் போலீஸை வரவழைத்து யாசின் முன்னிலையில் அந்த பணத்தை ஒப்படைத்தார்.
இந்த பணத்தை பெற்றுக் கொண்ட மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் சிறுவனை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து அவரது நேர்மையை பாராட்டினார். தனது குடும்பம் வறுமையில் வாடும் நிலையிலும் அந்த சிறுவன் நேர்மையாக இருந்ததை பலரும் பாராட்டி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் , குஷ்புவும் சிறுவனை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக யாசினின் குடும்பத்தை நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அப்போது அவர்களுக்கு உதவி செய்ய முன் வந்துள்ளனர்.
மேலும் , ரஜினியை பார்க்க வேண்டும் ஆனால் சிறுவனோ தனக்கு எந்த உதவிகளும் வேண்டாம் என்றுள்ளார், இதுகுறித்து சிறுவன் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் கூறுகையில் தனக்கு எந்த உதவிகளும் வேண்டாம். நடிகர் ரஜினிகாந்தை நேரில் பார்க்க வேண்டும். அவரின் தீவிர ரசிகன் என்று தெரிவித்தார். அதற்கு ஏற்பாடு செய்வதாக ரஜினி மன்ற நிர்வாகிகள் சிறுவனிடம் உறுதியளித்துள்ளனர்.
அது,மட்டுமல்லாமல் , சிறுவனின் கள்ளம்கபடமில்லாத செயல், சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பல்வேறு தரப்பினரின் பாராட்டையும் பெற்றுத் தந்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும், திரைத்துறையினரும் அச்சிறுவனுக்குப் பாராட்டுகள் தெரிவித்துள்ளதோடு உதவிகள் செய்யவும் முன்வந்துள்ளனர்.
இதனிடையே சிறுவன் தனக்கு நடிகர் ரஜினியை நேரில் பார்க்க வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தார். அதன்படி அவரின் விருப்பம் இன்று நிறைவேறியுள்ளது. சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் சிறுவன் முகமது யாசின் தனது குடும்பத்தினருடன் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துள்ளார் என்பது மகிழ்ச்சியான விடயமே.
tags;meet Rajini Integrity boy fulfilled
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- உங்களையெல்லாம் மன்னிக்கவே கூடாது! – பிக்பாஸ் வீட்டில் கார்த்தி! (காணொளி)
- ஸ்ரீ ரெட்டியின் லைவ் வீடியோ! – அதிர்ச்சியில் சினிமா பிரபலங்கள்!
- மாணவியின் கவனக்குறைவே உயிரிழப்புக்கு காரணம்! – கல்லூரி முதல்வர் தகவல்!
- மருத்துவர் நீச்சல் குளத்தில் பெண்களுக்கு பாலியல் சீண்டல்!
- ஆறுமுகம் பயிற்சியாளரே இல்லை! – கோவை மாணவி பலியான சம்பவம்!
- ஓரினச் சேர்க்கைக்கு மறுப்பு தெரிவித்ததால் கொலை செய்யப்பட்ட இளைஞர்!
- மதச்சிறுபான்மை இளைஞன் சட்டவிரோதமாகக் கைது! – சிபிஎம் ஆர்ப்பாட்டம்!
- சினிமா பாணியில் குழந்தைகளை கொன்று தானும் தூக்கில் தொங்கிய தாய்!
- 29-ஆம் தேதி அப்போலோவில் நேரில் சென்று ஆய்வு! – ஆறுமுகசாமி ஆணையம்!
- சீரியல் நடிகைகளை விபச்சாரத்திற்கு அழைத்த கும்பல்! – நடிகை துணிச்சல் புகார்!
- டெல்லி 11 பேர் மரணம்! – முடிவுக்கு வந்த டெல்லி போலீஸ்..! (விவரம்)
- ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்! : தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை! – மோதல்!
- ஸ்ரீரெட்டி பாலியல் புகார்! – ஏ.ஆர்.முருகதாஸ்! ஸ்ரீகாந்த்! வரிசையில் ராகவா லாரன்ஸ்! – அடுத்தது யார்?