Type to search

பட்டதாரி பெண் எரித்து கொலை: வாட்ஸ் ஆப் காதலனின் வெறிச்செயல் ( முழு விபரம் )!

INDIA CRIME Tamil nadu

பட்டதாரி பெண் எரித்து கொலை: வாட்ஸ் ஆப் காதலனின் வெறிச்செயல் ( முழு விபரம் )!

Share

{ Graduate girl burned killed }

சென்னையில் இருந்து ராமநாதபுரத்துக்கு வாட்ஸ் ஆப் காதலனை தேடிச்சென்ற பட்டதாரி பெண் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு குழந்தைகளின் தந்தையை காதலித்ததால் மாணவிக்கு நேர்ந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோச மங்கை அடுத்த ஆலங்குளத்தைச் சேர்ந்த வீரபாண்டி என்பவரது மகள் மாலதி. பி.ஏ. பட்டப்படிப்பு முடித்துள்ள இவர் தனது தந்தையுடன் சென்னையில் தங்கி வேலை தேடி வந்தார். மாலதியின் தாய் கலைசெல்வி ஊரில் தங்கி இருந்து விவசாயம் செய்து வருகிறார்

சென்னையில் இருந்து சில மாதங்களுக்கு ஒரு முறை தாயை பார்ப்பதற்கு மாலதி சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அந்தவகையில் கடந்த 29ந்தேதி ஊருக்கு சென்றவர் திரும்பி வரவில்லை மாயமானார். இது தொடர்பாக உத்திரகோச மங்கை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அவர் கருங்குளம் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் என்ற இளைஞருடன் பழகி வந்ததாக கூறப்பட்டதால், காவல்துறையினர் சிவக்குமாரை அழைத்து விசாரித்தனர். அப்போது, மாலதி தன்னை சந்திக்க வந்ததாகவும் அதன் பிறகு தஞ்சாவூரில் தோழியை பார்க்க சென்றதாகவும், அவர் திரும்பி வந்தவுடன் தகவல் சொல்கிறேன் என்றும் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

அவர் சொன்னதை உண்மை என்று நம்பிய காவல்துறையினர் மாலதி மாயமான வழக்கை கிடப்பில் போட்டனர். இந்த நிலையில் கருங்குளம் கருவேலங் காட்டுப்பகுதியில் எரிக்கப்பட்ட நிலையில் மனித எலும்பு கூடு ஒன்று கிடப்பதாகவும் அதன் அருகில் சுடிதார் மற்றும் வளையல்கள் காணப்படுவதாகவும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

காவல்துறையினரின் விசாரணையில் அது மாயமான பட்டதாரி பெண் மாலதியின் எலும்புக்கூடு என்பது தெரியவந்தது. தகவல் அறிந்து அங்கு வந்த மாலதியின் உறவினர்கள் கதறிஅழுதனர். உடனடியாக அங்கு தடயங்களை சேகரித்த காவல்துறையினர் மாலதியின் எலும்புக்கூட்டை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பிணக்கூறாய்வுக்காக எடுத்துச்சென்றனர்.

மேலும் மாலதியை கொலை செய்தது யார் ? என்பதையும் காவல்துறையினர் கண்டறிந்தனர். சென்னையில் தங்கி கல்லூரியில் படித்து வந்த மாலதி ரயிலில் சென்ற போது, அங்கு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த கருங்குளம் சிவக்குமாருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் செல்போன் நம்பர்களை பறிமாறிக் கொண்டு வாட்ஸ் ஆப் சாட்டிங்கில் ஈடுபட்டுள்ளனர். தனக்கு திருமணம் ஆனதை மறைத்த சிவக்குமார், மாலதியுடன் வாட்ஸ் ஆப் வீடியோ காலில் சாட்டிங் செய்த போது காதலை வெளிப்படுத்தி உள்ளார்.

ஒரு கட்டத்தில் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் வாடகைக்கு வீடு எடுத்து பெயருக்கு தாலி ஒன்றை கட்டிக்கொண்டு குடித்தனம் நடத்தி வந்ததாகவும் கூறப்படுகின்றது. கடந்த ஒரு வருடமாக இப்படி வாழ்க்கை நடத்தி வந்த நிலையில் அண்மையில் ஊருக்கு சென்ற சிவக்குமார் திரும்பி வரவில்லை எனக் கூறப்படுகின்றது.

மாலதியின் செல்போன் அழைப்பையும் எடுக்காமல் வாட்ஸ் ஆப் தொடர்பையும் தடுத்து விட்டதால் சிவக்குமாரை தேடி கடந்த 29 ஆம் திகதி சென்னையில் இருந்து கருங்குளத்திற்கு சென்றுள்ளார் மாலதி..! அங்குள்ளவர்களிடம் விசாரித்து சிவக்குமாரின் வீட்டிற்கு சென்றுள்ளார். சிவக்குமாரின் மனைவி தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றதால் வீட்டில் சிவக்குமார் மட்டும் தனியாக இருந்துள்ளார்.

சிவக்குமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரு குழந்தைகள் ஆன தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த மாலதி தன்னையும் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி உள்ளார். செய்வதறியாமல் திகைத்த சிவக்குமார் ஊரில் ஆட்கள் நடமாட்டம் குறைந்த பின்னர் மாலதியை தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கருவேலங்காட்டுக்குள் சென்றுள்ளார்.

அங்கு வைத்து அவரை சமாதனம் செய்வது போல நடித்து சுடிதார் துப்பட்டாவால் மாலதியின் வாயை இருக்க கட்டி கழுத்தை முறித்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரது சடலத்தில் கருவேல முள்ளை போட்டு பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்துள்ளார். மாலதியில் சடலம் எரிந்து கொண்டிருக்க வீட்டிற்கு சென்று மண் எண்ணெய் எடுத்து வந்து மீண்டும் சடலத்தின் மீது உற்றி எரியும் வரை உடன் இருந்துள்ளார். விடியும் நேரம் வந்ததால் பாதி எரிந்த நிலையில் கிடந்த எலும்பு கூட்டை அப்படியே போட்டு விட்டு தப்பி உள்ளார் சிவக்குமார்.

போலீசார் முதலில் விசாரித்த போது சில முக்கிய பிரமுகர்கள் சிபாரிசு செய்ததால் சிவக்குமார் மீது போலீசுக்கு சந்தேகம் எழாமல் இருந்துள்ளது. தற்போது சிவக்குமார்தான் கொலையாளி என்று தெரியவந்த நிலையில் தலைமறைவான அவரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடும் நிலை ஏற்பட்டுள்ளது..!

இதற்கிடையே கொலையாளி சிவக்குமாரை தப்பவிட்ட காவல்துறையினரை கண்டித்து, அங்கு திரண்ட மாலதியின் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காதலனின் பின்னணி தெரியாமல் பழகினால் என்ன விதமான விபரீதம் ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணம் ..!

Tags: Graduate girl burned killed

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 

Tags: