கோவை மாணவி உயிரிழந்த சம்பவம்! – போலி பயிற்சியாளர் சிறையில் அடைப்பு..!
Share

கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது, மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கைதான போலி பயிற்சியாளர் ஆறுமுகம், வரும் 27-ம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.coimbatore student dead – fake trainer imprisoned jail
கோவை அருகே நரசிபுரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் நடந்த பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது, பயிற்சியாளர் தள்ளிவிட்டதில் தலைகீழாக கீழே விழுந்த மாணவி லோகேஸ்வரி உயிரிழந்தார்.
இதனை அடுத்து, பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, வரும் 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ஞான சம்பந்தம் உத்தரவிட்டதை அடுத்து, கோவை மத்திய சிறையில் ஆறுமுகம் அடைக்கப்பட்டார்.
ஆறுமுகத்தை, 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க, அனுமதி கேட்டு போலீசார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இதனிடையே, தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி குறித்த புதிய சுற்றறிக்கை, இன்னும் சில தினங்களில் அனைத்துக் கல்லூரிகளுக்கும் அனுப்பப்படும் என்று, உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
ஆறுமுகத்திற்கு, போலி பயிற்சியாளர் சான்றிதழ் தயாரித்து தந்தது தொடர்பாக, ஈரோட்டைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பேரிடர் மேலாண்மை பயிற்சிக்கு, யாரிடம் அனுமதி பெற்று நடத்தப்பட்டது என விளக்கம் கேட்டு, சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்துக்கு, பாரதியார் பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- மத்தியப்பிரதேச விவசாயிகளை போலீஸார் சுட்டுத்தள்ளும் அதிர்ச்சி காணொளி!
- முஸ்லீம் ஆண்களுக்கு மட்டும்தான் காங்கிரஸ் கட்சி இருக்கின்றதா ? – பிரதமர் நரேந்திர மோடி கேள்வி
- புற்று நோயை குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடித்த மருத்துவ ஆய்வு மாணவி!
- வன நிலத்தை வளைத்துப் போட்ட “போலிச்சாமியார்” ஜக்கி…! – அம்பலப்படுத்திய தலைவர்..!
- உங்களையெல்லாம் மன்னிக்கவே கூடாது! – பிக்பாஸ் வீட்டில் கார்த்தி! (காணொளி)
- ஸ்ரீ ரெட்டியின் லைவ் வீடியோ! – அதிர்ச்சியில் சினிமா பிரபலங்கள்!
- மாணவியின் கவனக்குறைவே உயிரிழப்புக்கு காரணம்! – கல்லூரி முதல்வர் தகவல்!
- மருத்துவர் நீச்சல் குளத்தில் பெண்களுக்கு பாலியல் சீண்டல்!
- ஆறுமுகம் பயிற்சியாளரே இல்லை! – கோவை மாணவி பலியான சம்பவம்!