உயர் கல்வி ஆணையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்!
Share

{ edapadi palanisuvami letter modi }
பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு பதிலாக, உயர் கல்வி ஆணையம் அமைப்பதற்கான மத்திய அரசின் முயற்சிக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில், தற்போது நடைமுறையில் உள்ள பல்கலைக் கழக மானியக் குழு தொடர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
உயர் கல்வி விவகாரத்தில் கண்காணிப்பு மற்றும் நிதி ஒதுக்கீடு ஆகிய இரண்டிலும் யுஜிசி சிறப்பாக செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
1956ம் ஆண்டு முதல் இந்த அமைப்பு எவ்வித குற்றச்சாட்டுக்கும் உள்ளாகாமல் செயல்பட்டு வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தற்போது முன்வைக்கப்படும் உயர் கல்வி ஆணையம் நிதி அதிகாரங்களைக் கொண்டதாக இல்லை என்றும், இந்த அதிகாரம் மத்திய அரசின் நிறுவனமான மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
யுஜிசி முறை காரணமாக உயர்கல்வியில் 100 சதவீத நிதி ஒதுக்கீட்டினைப் பெற்று வரும் தமிழகம், உயர் கல்வி ஆணையம் அமைக்கப்பட்டால், அது 60 சதவீதமாக குறையும் என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே, பல்கலைக்கழக மானியக் குழு தொடர்வதையே தமிழகம் ஆதரிப்பதாகவும், எனவே, அது அப்படியே நீடிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags: edapadi palanisuvami letter modi
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- ஸ்ரீரெட்டியின் புகாருக்கு இயக்குநர், நடிகர்கள் பதில் அளிக்க வேண்டும் – டி.ராஜேந்தர்
- செயற்கைக்கோள் உருவாக்கத்தில் சென்னை மாணவர்கள் மீண்டும் சாதனை!
- கோவை கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம்: மேலும் ஒருவர் கைது!
- “இதை ஒழிக்கவே நான் அரசியலுக்கு வந்தேன்” : கமல்ஹாசன்!
- மோடியை பின்பற்றுவோரில் 1 கோடிப் பேர் போலிகள்..!
- பள்ளி வாகனம் மோதி 4-வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்! – உறவினர்கள் போராட்டம்!
- கள்ளக்காதலனை பழிதீர்க்க துப்பாக்கி வாங்க வந்த பெண்! – காரணம் என்ன?
- வளர்ந்து வரும் “கட்சி மற்றும் தோழர்களை” குறிவைக்கிறாரா ராகுல்காந்தி?
- தவறான சிகிச்சையால் பேசும் திறனை இழந்ததுடன் உயிருக்கு போராடிவரும் இளைஞர்..!
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
- Tamilnews.com
- Timetamil.com
- Gossip.tamilnews.com
- Sports.tamilnews.com
- World.tamilnews.com
- Cinema.tamilnews.com
- Srilanka.tamilnews.com