செயற்கைக்கோள் உருவாக்கத்தில் சென்னை மாணவர்கள் மீண்டும் சாதனை!
Share

{ Chennai students record satellite }
விலை மலிவான மற்றும் மிக குறைந்த எடையுள்ள செயற்கைக்கோளை சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
33.39 கிராம் எடை உள்ள இந்த செயற்கைக்கோள், உலகின் மிக மலிவான மற்றும் எடைகுறைவான செயற்கைக்கோள் என்னும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜெய்ஹிந்த்- 1S என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள், நாசா நடத்திய க்ரூப் இன் ஸ்பேஸ் என்ற போட்டியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
15 ஆயிரம் ரூபாய் செலவில் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ள ஜெய்ஹிந்த்- 1S செயற்கைக்கோளை, வானிலை ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்த முடியும் எனவும், அதனுள் பொருத்தப்பட்டிருகும் SD card மூலம் தகவல்களை data-வாக சேகரித்துக்கொள்ள முடியும் எனவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
முட்டையை விட சிறிய அளவில் இருக்கும் இந்த செயற்கைக்கோள், நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து, வருகிற ஆகஸ்ட் மாதம் விண்வெளிக்கு அனுப்பப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை ஹிந்துஸ்தான் கல்லூரியில் பொறியியல் முதலாம் ஆண்டு படித்துவரும் ஹரிகிருஷ்ணா, அமர்நாத், சுதி மற்றும் கிரி பிரசாத் ஆகிய மாணவர்களின் கடும் முயற்சியால் ஜெய்ஹிந்த்- 1S செயற்கைக்கோள் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: Chennai students record satellite
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- கோவை கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம்: மேலும் ஒருவர் கைது!
- “இதை ஒழிக்கவே நான் அரசியலுக்கு வந்தேன்” : கமல்ஹாசன்!
- மோடியை பின்பற்றுவோரில் 1 கோடிப் பேர் போலிகள்..!
- பள்ளி வாகனம் மோதி 4-வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்! – உறவினர்கள் போராட்டம்!
- கள்ளக்காதலனை பழிதீர்க்க துப்பாக்கி வாங்க வந்த பெண்! – காரணம் என்ன?
- வளர்ந்து வரும் “கட்சி மற்றும் தோழர்களை” குறிவைக்கிறாரா ராகுல்காந்தி?
- தவறான சிகிச்சையால் பேசும் திறனை இழந்ததுடன் உயிருக்கு போராடிவரும் இளைஞர்..!
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :