கோவையில் கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரம்! – பயிற்சியாளர் கைது!
Share

கோவையில், தனியார் கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார்.college student death case coimbatore – trainer arrested
கோவை நரசீபுரம் பகுதியில், தனியார் கலை அறிவியல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. நேற்று அந்த கல்லூரியில், பேரிடர் மேலாண்மைப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இதற்காக எந்த முன்னேற்பாடுகளும் செய்யாமல், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமலும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரண்டாவது மாடியிலிருந்து, கீழே வலைகட்டி குதிக்கும் பயிற்சியின்போது, பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்துவந்த, லோகேஷ்வரி என்ற மாணவி எதிர்பாராத விதமாக, உயிரிழந்தார். அந்த மாணவி குதிக்க மறுத்தும், பயிற்சியாளர் ஆறுமுகம் வலுக்கட்டாயமாக தள்ளிவிட்டதால்தான் மாணவி உயிர் பறிபோனது என்று மாணவர்கள் குற்றம்சாட்டினர். சமூக வலைதளங்களிலும் இதுகுறித்த வீடியோ பரவி வைரலானது.
இதையடுத்து, ஆறுமுகம் மீது, 304(2) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், கல்லூரிக்கு அழைத்துச் சென்றும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மீதும், பயிற்சியாளர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- பயிற்சியாளர் அலட்சியத்தால் மாணவி தலை சிதறி பலி! (அதிர்ச்சி காணொளி)
- திருடுவதற்கு முன் பிரேக் டான்ஸ்! – வைரலான திருடனின் வீடியோ!
- காவல் நிலையம் எதிரே பெண் வெட்டி கொடூரமாக கொலை..!
- ஏ.ஆர்.முருகதாஸ் ஜி ‘க்ரீன் பார்க் ஹோட்டல் ஞாபகம் இருக்கா?’ – ஸ்ரீரெட்டி!
- அஜித்குமார்! முரளி! சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம்! – நடந்தது என்ன?
- போலீஸாரின் சீருடை அணிந்து பணம் பறிக்க முயன்ற கில்லாடி பெண்!
- ஓரினசேர்க்கையாளர்கள் தம்பதிகளாக வாழ்வது சட்ட ரீதியில் தவறு! – உச்சநீதிமன்றம்!
- ம.நீ.ம கட்சியை வழிநடத்தும் செயற்குழு பட்டியல்! – கமல் அறிவிப்பு! (காணொளி)
- பள்ளி வாகனம் மோதி 4-வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்! – உறவினர்கள் போராட்டம்!
- கள்ளக்காதலனை பழிதீர்க்க துப்பாக்கி வாங்க வந்த பெண்! – காரணம் என்ன?
- தவறான சிகிச்சையால் பேசும் திறனை இழந்ததுடன் உயிருக்கு போராடிவரும் இளைஞர்..!