தவறான சிகிச்சையால் பேசும் திறனை இழந்ததுடன் உயிருக்கு போராடிவரும் இளைஞர்..!
Share

மதுரையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாஸ்கரன். இவரது மகன் செல்வக்குமாருக்கு தொண்டையில் கட்டி இருந்ததால் மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.losing ability speak wrong treatment struggling survive
ஆனால் அறுவை சிகிச்சை பலனில்லாமல் போனதால், சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சையளித்துள்ளனர்.
அங்கு அவருக்கு தொண்டையில் புற்றுநோய் இருப்பதாக கூறி கீமோ தெரப்பி உள்ளிட்ட புற்றுநோய்க்கான சிகிச்சைகளை அளித்துள்ளனர். அதற்காக மருத்துவ செலவாக பல லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் உடல் நிலை மோசமடையவே ஒரு கட்டத்தில் செல்வகுமார் பேசும் திறனை இழந்தார்.
இதனையடுத்து அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் சோதனை செய்ததில் செல்வக்குமாருக்கு புற்றுநோய் இல்லையெனவும், தொண்டையில் நீண்ட நாட்களாக சளி முற்றி காசநோயாக மாறியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆட்டோ ஓட்டுனர் பாஸ்கரன், பரங்கிமலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டார்.
இதையடுத்து போலீசாரின் தலையீட்டால், செல்வகுமாருக்கு சிகிச்சையளிக்க பரங்கிமலையிலுள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் முன்வந்தது.
ஆனால் அங்கு முறையான சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக செயல்படுவதால், செல்வக்குமாரின் உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளதாகவும், மருத்துவமனை நிர்வாகம் பரங்கிமலை உதவி ஆணையரை வைத்து மிரட்டி தங்கள் மகனை மருத்துவமனையிலிருந்து வெளியேற்ற முயல்வதாகவும் பாஸ்கரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து காவல் ஆணையர் அலுவலகத்திலும் பாஸ்கர் புகார் அளித்துள்ளார். ஆனால், இந்த புகாரை மறுக்கும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் ஏற்கனவே செல்வகுமாருக்கு புற்றுநோய் இருந்துள்ளதாகவும் அதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், அதனை அவரது பெற்றோர் புரிந்து கொள்ளாமல் நடந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே புற்று நோய் இருப்பதை போன்ற பொய்யான அறிக்கையை தனியார் மருத்துவமனை நிர்வாகம் தயார் செய்துள்ளதாகவும், எனவே தங்களது மகனுக்கு வேறு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக்கூறி செல்வகுமாரின் பெற்றோர், முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
குற்றம் யாருடையதாக இருந்தாலும் உயிருக்கு போராடி வரும் இளைஞர் செல்வக்குமாருக்கு அரசும், காவல்துறையும் விரைந்து செயல்பட்டு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாகும்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- அஜித்குமார்! முரளி! சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம்! – நடந்தது என்ன?
- இந்தியா எங்களுக்குத் துரோகம் இழைத்து விட்டது! – ஈரான் தூதரகம் ஆதங்கம்..!
- ஏ.ஆர்.முருகதாஸ் ஜி ‘க்ரீன் பார்க் ஹோட்டல் ஞாபகம் இருக்கா?’ – ஸ்ரீரெட்டி!
- வாழ்க்கையில் முன்னேற கடவுளிடம் அருள் கேளுங்கள்! – ஆன்மீக ரஜினிகாந்த்!
- ஜெயலலிதா! கருணாநிதிக்கு பிறகு தமிழகத்தில் ரஜினிகாந்த்! – அமித் ஷா!
- பேரறிவாளனுக்காக ராகுல் காந்தியிடம் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித்!
- ஓரினசேர்க்கையாளர்கள் தம்பதிகளாக வாழ்வது சட்ட ரீதியில் தவறு! – உச்சநீதிமன்றம்!
- ஆன்மிக அரசியலில் சீட்டிங்கிற்கு இடம் உண்டா?
- பாலியல் வன்கொடுமை! – வாய் பேசாத சிறுமி படுகொலை! (காணொளி)
- மணல் கடத்தல் தகாரறு! – வாலிபர் கழுத்தறுத்து கொலை!
- அரசியலில் இறங்குகிறாரா? – இயக்குனர் பா.ரஞ்சித்…!