கள்ளக்காதலனை பழிதீர்க்க துப்பாக்கி வாங்க வந்த பெண்! – காரணம் என்ன?
Share

சென்னை எம்ஜிஆர் நகர் நெசப்பாக்கம் பாரதிநகரைச் சேர்ந்த கார்த்திகேயன் மனைவி மஞ்சுளா. மஞ்சுளாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த நாகராஜனுக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது.chennai woman buy gun – reason
இதனால் மஞ்சுளா – கார்த்திகேயன் தம்பதியின் மகன் ரிதேஷ் சாயை தினமும் ட்யூசனுக்கு அழைத்துச் சென்று வருவதை நாகராஜன் வாடிக்கையாக கொண்டிருந்தான்.
இந்த சமயத்தில் தாய் மஞ்சுளாவுக்கும் – நாகராஜனுக்கும் இடையே இருந்த தகாத உறவு குறித்து தந்தை கார்த்திகேயனிடம் ரிதேஷ் சாய் கூறியதாக சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த நாகராஜன், சிறுவன் ரிதேஷைக் கடத்திச் சென்று சேலையூர் அருகே மது ஊற்றிக் கொடுத்து கம்பியால் கொடூரமாக அடித்துக் கொன்றது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது.
இதையடுத்து, நாகராஜன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். இந்த நாகராஜன் விரைவில் ஜாமீனில் வெளி வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நாகராஜனின் கள்ளக்காதலியான மஞ்சுளா, ஒரு பொருள் வாங்குவதற்காக பிரசாந்த், சுரேஷ் என்ற இருவரிடம் 5 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், அவர்கள் அந்தப் பொருளுக்கு பதிலாக பொம்மையைப் போல் ஒன்றைக் கொடுத்து ஏமாற்றி விட்டதாகவும், சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அது என்ன பொருள் என போலீசார் துருவி துருவி விசாரித்த போது, துப்பாக்கி வாங்குவதற்காக தாம் பணம் கொடுத்ததாகவும், பொம்மைத் துப்பாக்கியை வாங்கிக் கொடுத்து அவர்கள் ஏமாற்றி விட்டதாகவும் மஞ்சுளா தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், தமது மகனை கொடூரமாக கொலை செய்த கள்ளக் காதலன் நாகராஜனை சுட்டுக் கொன்று பழிதீர்ப்பதற்காகவே துப்பாக்கி வாங்க மஞ்சுளா முயற்சி மேற்கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து, அனுமதியின்றி துப்பாக்கி வாங்க முயன்றதற்காக மஞ்சுளாவையும், துப்பாக்கி வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றியதற்காக பிரேம், சுரேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் வேறு ஏதும் மர்மங்கள் புதைந்துள்ளனவா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- வளர்ந்து வரும் “கட்சி மற்றும் தோழர்களை” குறிவைக்கிறாரா ராகுல்காந்தி?
- தவறான சிகிச்சையால் பேசும் திறனை இழந்ததுடன் உயிருக்கு போராடிவரும் இளைஞர்..!
- அஜித்குமார்! முரளி! சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம்! – நடந்தது என்ன?
- இந்தியா எங்களுக்குத் துரோகம் இழைத்து விட்டது! – ஈரான் தூதரகம் ஆதங்கம்..!
- ஏ.ஆர்.முருகதாஸ் ஜி ‘க்ரீன் பார்க் ஹோட்டல் ஞாபகம் இருக்கா?’ – ஸ்ரீரெட்டி!
- வாழ்க்கையில் முன்னேற கடவுளிடம் அருள் கேளுங்கள்! – ஆன்மீக ரஜினிகாந்த்!
- ஜெயலலிதா! கருணாநிதிக்கு பிறகு தமிழகத்தில் ரஜினிகாந்த்! – அமித் ஷா!
- பேரறிவாளனுக்காக ராகுல் காந்தியிடம் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித்!
- ஓரினசேர்க்கையாளர்கள் தம்பதிகளாக வாழ்வது சட்ட ரீதியில் தவறு! – உச்சநீதிமன்றம்!
- ஆன்மிக அரசியலில் சீட்டிங்கிற்கு இடம் உண்டா?
- பாலியல் வன்கொடுமை! – வாய் பேசாத சிறுமி படுகொலை! (காணொளி)
- மணல் கடத்தல் தகாரறு! – வாலிபர் கழுத்தறுத்து கொலை!
- அரசியலில் இறங்குகிறாரா? – இயக்குனர் பா.ரஞ்சித்…!