குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!
Share

{ floods raters crater}
குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் மிக சிறந்த சுற்றுலா ஸ்தலங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள குற்றாலம். இங்கு ஆண்டுதோறும் ஜுன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் சீசன் காலமாகும். இங்கு குளிப்பதற்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவர்.
இந்த நிலையில் தற்போது கடந்த சில தினங்களாக அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சற்று குறைந்து விழுந்து வந்தது. மேலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள் என்பதால், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இதனால் ஆண்,பெண் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இதே போல் பழைய குற்றலாம், ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டதாலும், வாகன போக்குவரத்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் குலுங்கியது. கார் பார்க்கிங் வரை நீண்ட வரிசையில் நின்று மக்கள் குளித்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில் தற்போது, குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றலாம் ஆகிய அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
ஆனாலும் மெயினருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால், பாதுகாப்பு கருதி அந்த அருவியில் மட்டும் பொதுமக்கள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
Tags: floods raters crater
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- மீன்களில் ரசாயனக் கலவை தெளிக்கப்படும் விவகாரம் தொடர்பாக, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!
- தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் 196 கருணை மதிப்பெண் தர உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
- தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள ராணுவம் தயார்: ராணுவ தளபதி அறிவிப்பு!
- கெளரவத்திற்காக சிறுமியை கொன்ற குடும்பம்! – உண்மையை சொன்ன பாசத் தாய்!
- ஊழலை ஒழிக்கும் எண்ணம் தி.மு.கவுக்கு துளியும் இல்லை! – அமைச்சர் ஜெயக்குமார்!
- சென்னை ஏர்டெல் ஊழியரிடம் கொள்ளையடித்த 2 இளைஞர்கள் கைது!
- 8 வழிச்சாலைக்காக நிலம் வழங்கியோருக்கு இலவச வீட்டுமனை பட்டா..!
- தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திடீர் லண்டன் பயணம்..!
- சிறுமி ஹாசினி பாலியல் கொலை வழக்கு! – உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு!
- தமிழகத்தில் ஊழல் கறைபடியாத கட்சியுடன் கூட்டணி! – அமித்ஷா உறுதி!
- நிர்பயா பாலியல் கொலை வழக்கு! : தூக்கு தண்டனை உறுதி செய்து தீர்ப்பு! – உச்சநீதிமன்றம்!
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
- Tamilnews.com
- Timetamil.com
- Gossip.tamilnews.com
- Sports.tamilnews.com
- World.tamilnews.com
- Cinema.tamilnews.com
- Srilanka.tamilnews.com