முதல்வரே! எங்களோடு விவாதிக்கத் தயாரா? – “பாலா பாரதி” சவால்!
Share

வாய்மையே வெல்லும் என்ற அரசுகோபுரம்தாங்கிய மண்டபத்தில் நேற்று உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் எட்டுவழிச்சாலை குறித்து பேசுகையில் குறைந்தபட்ச உண்மை கூட உரைக்கவில்லை.chief minister ready discuss us- Bala Bharati challenge
காவல்துறை எழுதிக்கொடுத்த பொய்களை அப்படியே அச்சுப்பிசகாமல் ஒப்பித்துள்ளார்.
எங்களது வாகனத்தை வழிமறித்த காவல்துறையினர் எஸ்பியிடம் பெர்மிசன் வாங்கினீர்களா ? என்றகேள்வியைதான் முன்வைத்தார்.
விவசாயிகளை சந்திக்க காவல்துறையிடம் நாங்கள் ஏன் அனுமதி வாங்கவேண்டும் என்று நாங்கள்கேட்டோம். டிஎஸ்பி யும் அதையே போனில்கேட்டார்.
விவசாயிகளைசந்திக்க காவல்துறையிடம் அனுமதி ஏன் வாங்கவேண்டும் எனக்கேட்டேன். பிறகு அனுமதித்துவிட்டு மீண்டும் விவசாயிகளை சந்தித்து உரையாடிக்கொண்டிருந்தபோதுதான் எங்களை கைது செய்தார்கள்.
உண்மை இவ்வாறு இருக்க சட்டமன்றத்தில் நேற்று அவர் அளித்த பதிலில் உண்மைக்கு மாறான தகவல்களே உள்ளன.
அத்தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரையே நாங்கள் சந்திக்க அனுமதிக்கவில்லை என்றும் அதனால் அவர்நீதிமன்றம் சென்றுள்ளார் என்றும் தீர்ப்புவரும்வரை நீங்களும் போகக்கூடாதென்றே காவல்துறையினர் தெரிவித்தனர்.
நான் அப்போதும் காவல்நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் உரிமையை நீங்கள் பறித்தது தவறு. அதே தவறை எங்களிடம் காட்டமுடியாது என்றும் கூறினேன்.
நடந்தவைகளில் எது உண்மை எது பொய் என்று நாங்கள் விளக்குவதற்கு முதலமைச்சர் நேரம் ஒதுக்கி எங்களை சந்திக்க தயாரா?
விவசாயிகளின்மீது அக்கறை உள்ளதாக காட்டிக்கொள்ளும் முதல்வர் அப்பகுதி விவசாயிகளை சந்திக்கத்தயாரா?
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே! மக்கள் விவசாயிகள் நலனை முன்னிட்டு எங்களோடு விவாதிக்கத் தயாரா? என பாலா பாரதி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சவால் எழுப்பியுள்ளார்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- “திமுக அழைத்தால் செல்வேன்” – சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்!
- அந்த ஒரு விஷயத்தில் அரசியல் தலைவர்கள் அக்கறை காட்டும் நோக்கம்?
- திருநங்கை உதவி ஆய்வாளருக்கு தொல்லை! – முன்னாள் காதலன் மீது புகார்!
- கெளரவத்திற்காக சிறுமியை கொன்ற குடும்பம்! – உண்மையை சொன்ன பாசத் தாய்!
- ஊழலை ஒழிக்கும் எண்ணம் தி.மு.கவுக்கு துளியும் இல்லை! – அமைச்சர் ஜெயக்குமார்!
- சென்னை ஏர்டெல் ஊழியரிடம் கொள்ளையடித்த 2 இளைஞர்கள் கைது!
- 8 வழிச்சாலைக்காக நிலம் வழங்கியோருக்கு இலவச வீட்டுமனை பட்டா..!
- தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திடீர் லண்டன் பயணம்..!
- சிறுமி ஹாசினி பாலியல் கொலை வழக்கு! – உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு!
- தமிழகத்தில் ஊழல் கறைபடியாத கட்சியுடன் கூட்டணி! – அமித்ஷா உறுதி!
- நிர்பயா பாலியல் கொலை வழக்கு! : தூக்கு தண்டனை உறுதி செய்து தீர்ப்பு! – உச்சநீதிமன்றம்!
- காவல் அதிகாரி அடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்த கட்சி!