தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள ராணுவம் தயார்: ராணுவ தளபதி அறிவிப்பு!
Share

{ Army ready face extremist threat }
தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பதான்கோட் அருகே உள்ள மமுன் ராணுவ தளத்துக்கு நேற்று சென்று ராவத் ஆய்வு செய்தார். அப்போது ராணுவத்தின் தயார் நிலை மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பு மேம்பாட்டு வசதிகள் குறித்து உயர் அதிகாரிகள் ராவத்திடம் எடுத்துரைத்தனர். பின்னர் அங்குள்ளவீரர்களுடன் ராவத் உரையாடினார்.
பின்னர் ராவத் கூறும்போது, “தீவிரவாத அச்சுறுத்தலை எதிர் கொள்வதற்கு ராணுவம் தயார் நிலையில் இருக்கின்றது” என்றார்.
ராவத்துடன் ராணுவத்தின் மேற்கு படை உயர் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் சுரிந்தர் சிங்கும் சென்றிருந்தார் என பாதுகாப்புத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று முன்தினம் பஞ்சாப் மாநிலத்துக்கு சென்ற ராவத், அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோயிலுக்கு சென்று வழிபட்டார்.
Tags: Army ready face extremist threat
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- கெளரவத்திற்காக சிறுமியை கொன்ற குடும்பம்! – உண்மையை சொன்ன பாசத் தாய்!
- ஊழலை ஒழிக்கும் எண்ணம் தி.மு.கவுக்கு துளியும் இல்லை! – அமைச்சர் ஜெயக்குமார்!
- சென்னை ஏர்டெல் ஊழியரிடம் கொள்ளையடித்த 2 இளைஞர்கள் கைது!
- 8 வழிச்சாலைக்காக நிலம் வழங்கியோருக்கு இலவச வீட்டுமனை பட்டா..!
- தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திடீர் லண்டன் பயணம்..!
- சிறுமி ஹாசினி பாலியல் கொலை வழக்கு! – உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு!
- தமிழகத்தில் ஊழல் கறைபடியாத கட்சியுடன் கூட்டணி! – அமித்ஷா உறுதி!
- நிர்பயா பாலியல் கொலை வழக்கு! : தூக்கு தண்டனை உறுதி செய்து தீர்ப்பு! – உச்சநீதிமன்றம்!
- காவல் அதிகாரி அடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்த கட்சி!